திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அடிமைப் பதிகம்
aṭimaip patikam
சரணப் பதிகம்
saraṇap patikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

086. உள்ளப் பதிகம்
uḷḷap patikam

    பொது
    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. நீரார் சடையது நீண்மால் விடையது நேர்கொள்கொன்றைத்
    தாரார் முடியது சீரார் அடியது தாழ்வகற்றும்
    பேரா யிரத்தது பேரா வரத்தது பேருலகம
    ஒரா வளத்ததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
  • 2. மட்டுப் படாதது மாமறை யாலும் மலப்பகையால்
    கட்டுப் படாதது மாலா தியர்தம் கருத்தினுக்கும்
    தட்டுப் படாதது பார்முதல் பூதத் தடைகளினால்
    ஒட்டுப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
  • 3. பேதப் படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும்
    சேதப் படாதது நன்றிது தீதெனச் செய்கைகளால்
    ஏதப் படாததுள் எட்டப் படாததிங் கியாவர்கட்கும்
    ஓதப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
  • 4. தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப்
    பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக்
    கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள
    ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
  • 5. பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும்
    இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர்
    மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர்
    உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.

உள்ளப் பஞ்சகம் // உள்ளப் பதிகம்

No audios found!