2. திருவில் தோன்றும் மகளேநீ செய்த தவந்தான் யார்அறிவார்
மருவில் தோன்றும் கொன்றையந்தார் மார்பர் ஒற்றி மாநகரார்
கருவில் தோன்றும் எங்கள்உயிர் காக்க நினைத்த கருணையினார்
குருவிற் றோன்றும் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
4. சேலை நிகர்கண் மகளேநீ செய்த தவந்தான் செப்பரிதால்
மாலை அயனை வானவரை வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
வேலை விடத்தை மிடற்றணிந்தார் வீட்டு நெறியாம் அரசியற்செங்
கோலை அளித்தார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.