திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பேரன்புக் கண்ணி
pēraṉpuk kaṇṇi
    சிந்து
    திருச்சிற்றம்பலம்
  • 1. புங்கவர் புகழுமாதங்கமு கந்திகழ்
    எங்கள் கணேசராந் துங்கற்கு - மங்களம்.
  • 2. போதந் திகழ்பர நாதந் தனில்நின்ற
    நீதராஞ் சண்முக நாதற்கு - மங்களம்.
  • 3. பூசைசெய் வாருளம் ஆசைசெய் வார்தில்லை
    ஈசர் எமதுநட ராஜற்கு - மங்களம்.
  • 4. பூமி புகழ்குரு சாமி தனைஈன்ற
    வாமி எனுஞ்சிவ காமிக்கு - மங்களம்.
  • 5. புங்கமி குஞ்செல்வந் துங்கமு றத்தரும்
    செங்க மலத்திரு மங்கைக்கு - மங்களம்.
  • 6. பூணி லங்குந்தன வாணி பரம்பர
    வாணி கலைஞர்கொள் வாணிக்கு - மங்களம்.
  • 7. புண்ணிய ராகிய கண்ணிய ராய்த்தவம்
    பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு - மங்களம்.

மங்களம் // மங்களம்