திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருமருந்தருள் நிலை
tirumaruntaruḷ nilai
சிவ சிதம்பர சங்கீர்த்தனம்
siva sitampara saṅkīrttaṉam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

098. திருவருள் விலாசம்
tiruvaruḷ vilāsam

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்
    அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து
    நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்
    நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
    வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து
    விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
    தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்
    தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே.
  • 2. திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
    திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
    பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
    பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
    ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
    உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
    தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
    சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே.

திருவருள் விலாசம் // திருவருள் விலாசம்