Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
ஆன்ம விசாரத் தழுங்கல்
āṉma visārat taḻuṅkal
திருவருள் விழைதல்
tiruvaruḷ viḻaital
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
012. அவா அறுத்தல்
avā aṟuttal
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே
சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவஞ்செய்வான் போலே
ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்.
2.
சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
3.
விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி விளைவிலா தூண்எலாம் மறுத்த
கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் கருத்துவந் துண்ணுதற் கமையேன்
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த
பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என்செய்வேன் எந்தாய்.
4.
உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் றொருவனை உரைப்பதோர் வியப்போ
குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்தபே ராசை
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்.
5.
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண்
நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் உணவில்
ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் அய்யகோ அடிச்சிறு நாயேன்
பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.
6.
பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
7.
உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பலகால்
கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் கட்டிநல் தயிரிலே கலந்த
தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் சம்பழச் சோற்றிலே தடித்தேன்
திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்.
8.
மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.
9.
தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் தவறவிட் டிடுவதற் கமையேன்
கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் கொட்டினேன் குணமிலாக் கொடியேன்
வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப மலங்கொட்டஓடிய புலையேன்
பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த பாவியேன் என்செய்வேன் எந்தாய்.
10.
வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டிவைத்தலே துவட்டலில்சுவைகள்
உறுத்தலே முதலா உற்றபல் உணவை ஒருமல வயிற்றுப்பை உள்ளே
துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன் துணிந்தரைக்கணத்தும்வன் பசியைப்
பொறுத்தலேஅறியேன் மலப்புலைக்கூட்டைப்பொறுத்தனன்என்செய்வேன்எந்தாய்.
11.
பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் பண்ணிய பண்ணிகா ரங்கள்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
12.
அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் தவம்புரிந் தான்என நடித்தேன்
பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கடிபுனையமுயன்றிலேன் அறிவில்மூடனேன்என்செய்வேன்எந்தாய்.
13.
உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்பநின் ஆணைநின் தனக்கே
தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணைநினை அல்லால்
கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.
அவா அறுத்தல் // அவா அறுத்தல்
No audios found!
Oct,12/2014: please check back again.