திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கைம்மாறின்மை
kaimmāṟiṉmai
திருவருட் கொடை
tiruvaruṭ koṭai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

088. பாமாலை ஏற்றல்
pāmālai ēṟṟal

    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித்
    தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த
    சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
    நல்லான்தன் தாட்கே நயந்து.
  • 2. சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
    வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
    காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
    சேமநட ராஜன் தெரிந்து.
  • 3. ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம்
    வேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார
    விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த
    எந்தைநட ராஜன் இசைந்து.
  • 4. இன்னுரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திடுக
    என்னுரையும் பொன்னுரைஎன் றேஅணிந்தான் - தன்னுரைக்கு
    நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார்
    ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து.
  • 5. என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
    தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
    காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
    சாலையிலே வாஎன்றான் தான்.
  • 6. என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப்
    பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில்
    நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய்
    வல்லான் திருக்கருணை வாய்ப்பு.
  • 7. முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம்
    அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம்
    பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத்
    தாரா வரங்களெலாம் தந்து.
  • 8. பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே
    என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில்
    வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ
    தெல்லாம் திருவருட்சீ ரே.
  • 9. பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம்
    தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன்
    இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான
    மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து.
  • 10. நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றமொன்றும்
    ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்
    புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்
    எண்ணியஎல் லாம்புரிகின் றேன்.
  • 11. எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க
    நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற
    உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த
    தெள்ளமுதோ அம்பலவன் சீர்.
  • 12. ஆக்கி அளித்தல்முத லாந்தொழில்ஓர் ஐந்தினையும்
    தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
    எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
    கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ.

பாமாலை ஏற்றல் // பாமாலை ஏற்றல்

No audios found!