திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆற்றாப் புலம்பல்
āṟṟāp pulampal
புண்ணியநீற்று மான்மியம்
puṇṇiyanīṟṟu māṉmiyam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

031. திருவருள் விழைதல்
tiruvaruḷ viḻaital

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்.
  • 1. தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினைஏத்திக்
    காணு வேன்இலை அருள்இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்
    மாணும் அன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
    நாணு வேன்அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே.
  • 2. கடைப்பட் டேங்கும்இந் நாயினுக் கருள்தரக் கடவுள்நீ வருவாயேல்
    மடைப்பட் டோங்கிய அன்பகத் தொண்டர்கள் வந்துனைத் தடுப்பாரேல்
    தடைப்பட் டாய்எனில் என்செய்வேன் என்செய்வேன் தளர்வது தவிரேனே
    அடைப்பட் டோங்கிய வயல்திருத் தணிகையம் பதிஅமர்ந் திடுதேவே.
  • 3. தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
    மூவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முருகநின் பெயர்சொல்வோர்
    யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
    தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே.

திருவருள் விழைதல் // திருவருள் விழைதல்