திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இறை இன்பக் குழைவு
iṟai iṉpak kuḻaivu
கைம்மாறின்மை
kaimmāṟiṉmai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

057. அனுபவ நிலை
aṉupava nilai

    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
    வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
    ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
    தேன்செய்த தெள்ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே.
  • 2. நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர்
    வான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன்
    கோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில்
    தான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே.
  • 3. திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண்
    டுருநிலை பெற்றனன் ஒன்றே சிவமென ஓங்குகின்ற
    பெருநிலை பெற்றனன் சுத்தசன் மார்க்கம் பிடித்துநின்றேன்
    இருநிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்குளவே.
  • 4. எத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால்
    வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான்சொன்ன வார்த்தைகள்இங்
    கத்தனை யும்சம் மதித்தருள் செய்தனை அம்பலத்தே
    முத்தனை யாய்நினக் கென்மேல் இருக்கின்ற மோகம்என்னே.
  • 5. இனியே இறையும் சகிப்பறி யேன்எனக் கின்பநல்கும்
    கனியேஎன் தன்இரு கண்ணேமுக் கண்கொண்ட கற்பகமே
    தனியேஎன் அன்புடைத் தாயேசிற் றம்பலம் சார்தந்தையே
    முனியேல் அருள்க அருள்கமெய்ஞ் ஞானம் முழுதையுமே.
  • 6. புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
    நித்தியஞ் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீஇனிநன்
    முத்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
    சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.
  • 7. கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே
    வாடிய வாட்டமெல் லாந்தவிர்த் தேசுக வாழ்வளிப்பாய்
    நீடிய தேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
    ஆடிய பாதம் அறியச்சொன் னேன்என தாண்ட வனே.
  • 8. ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருளா ரமுதம்
    தேக்கிமெய் இன்புறச் செய்தருள் செய்தருள் செய்தருள்நீ
    நீக்கினை யேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
    தூக்கிய பாதம் அறியச்சொன் னேன்அருட் சோதியனே.

அனுபவ நிலை // அனுபவ நிலை

No audios found!