திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அற்புதம் அற்புதமே
aṟputam aṟputamē
அக்கச்சி
akkachsi
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

128. ஆணிப்பொன்னம்பலக் காட்சி
āṇippoṉṉampalak kāṭsi

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
    அற்புதக் காட்சிய டி - அம்மா
    அற்புதக் காட்சிய டி.
  • கண்ணிகள்
  • 2. ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
    வீதிஉண் டாச்சுத டி - அம்மா
    வீதிஉண் டாச்சுத டி. ஆணி
  • 3. வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
    மேடை இருந்தத டி - அம்மா
    மேடை இருந்தத டி. ஆணி
  • 4. மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
    கூடம் இருந்தத டி - அம்மா
    கூடம் இருந்தத டி. ஆணி
  • 5. கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
    மாடம் இருந்தத டி - அம்மா
    மாடம் இருந்தத டி. ஆணி
  • 6. ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
    என்னென்று சொல்வன டி - அம்மா
    என்னென்று சொல்வன டி. ஆணி
  • 7. ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
    சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா
    சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி
  • 8. பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
    பவளம தாச்சுத டி - அம்மா
    பவளம தாச்சுத டி. ஆணி
  • 9. மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
    மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா
    மாணிக்கம் ஆச்சுத டி. ஆணி
  • 10. பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
    பேர்மணி ஆச்சுத டி - அம்மா
    பேர்மணி ஆச்சுத டி. ஆணி
  • 11. வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
    வெண்மணி ஆச்சுத டி - அம்மா
    வெண்மணி ஆச்சுத டி. ஆணி
  • 12. புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
    பொன்மணி ஆச்சுத டி - அம்மா
    பொன்மணி ஆச்சுத டி. ஆணி
  • 13. பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
    படிகம தாச்சுத டி - அம்மா
    படிகம தாச்சுத டி. ஆணி
  • 14. ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
    இசைந்தபொற் றம்பம டி - அம்மா
    இசைந்தபொற் றம்பம டி. ஆணி
  • 15. பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
    புதுமைஎன் சொல்வன டி - அம்மா
    புதுமைஎன் சொல்வன டி. ஆணி
  • 16. ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
    என்னள வல்லவ டி - அம்மா
    என்னள வல்லவ டி. ஆணி
  • 17. ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
    ஆகவந் தார்கள டி - அம்மா
    ஆகவந் தார்கள டி. ஆணி
  • 18. வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
    வல்லபம் பெற்றன டி - அம்மா
    வல்லபம் பெற்றன டி. ஆணி
  • 19. வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
    மணிமுடி கண்டேன டி - அம்மா
    மணிமுடி கண்டேன டி. ஆணி
  • 20. மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
    மற்றது கண்டேன டி - அம்மா
    மற்றது கண்டேன டி. ஆணி
  • 21. கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
    கோயில் இருந்தத டி - அம்மா
    கோயில் இருந்தத டி. ஆணி
  • 22. கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
    கூசாது சென்றன டி - அம்மா
    கூசாது சென்றன டி. ஆணி
  • 23. கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
    கோடிபல் கோடிய டி - அம்மா
    கோடிபல் கோடிய டி. ஆணி
  • 24. ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
    ஐவண்ணம் ஆகும டி - அம்மா
    ஐவண்ணம் ஆகும டி. ஆணி
  • 25. அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்
    அப்பாலே சென்றன டி - அம்மா
    அப்பாலே சென்றன டி. ஆணி
  • 26. அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
    ஐவர் இருந்தார டி - அம்மா
    ஐவர் இருந்தார டி. ஆணி
  • 27. மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
    மணிவாயில் உற்றேன டி - அம்மா
    மணிவாயில் உற்றேன டி. ஆணி
  • 28. எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
    இருவர் இருந்தார டி - அம்மா
    இருவர் இருந்தார டி. ஆணி
  • 29. அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
    அன்பொடு கண்டேன டி - அம்மா
    அன்பொடு கண்டேன டி. ஆணி
  • 30. அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
    அம்மை இருந்தாள டி - அம்மா
    அம்மை இருந்தாள டி. ஆணி
  • 31. அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
    அமுதமும் உண்டேன டி - அம்மா
    அமுதமும் உண்டேன டி. ஆணி
  • 32. தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
    சந்நிதி கண்டேன டி - அம்மா
    சந்நிதி கண்டேன டி. ஆணி
  • 33. சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
    சாமி அறிவார டி - அம்மா
    சாமி அறிவார டி.
  • 34. ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
    அற்புதக் காட்சிய டி - அம்மா
    அற்புதக் காட்சிய டி.

ஆணிப்பொன்னம்பலக் காட்சி // ஆணிப்பொன்னம்பலக் காட்சி