திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பிரபஞ்ச வெற்றி
pirapañsa veṟṟi
போகம் சுகபோகம்
pōkam sukapōkam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

134. அம்பலத்தரசே
ampalattarasē

    நாமாவளி
    சிந்து
    திருச்சிற்றம்பலம்
  • 1. சிவசிவ கஜமுக கணநா தா
    சிவகண வந்தித குணநீ தா.
  • 2. சிவசிவ சிவசிவ தத்துவ போதா
    சிவகுரு பரசிவ சண்முக நாதா.
  • 3. அம்பலத் தரசே அருமருந் தே
    ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
  • 4. பொதுநடத் தரசே புண்ணிய னே
    புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.
  • 5. மலைதரு மகளே மடமயி லே
    மதிமுக அமுதே இளங்குயி லே.
  • 6. ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
    அற்புதத் தேனே மலைமா னே.
  • 7. சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
    சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.
  • 8. படன விவேக பரம்பர வேதா
    நடன சபேச சிதம்பர நாதா.
  • 9. அரிபிர மாதியர் தேடிய நாதா
    அரகர சிவசிவ ஆடிய பாதா.
  • 10. அந்தண அங்கண அம்பர போகா
    அம்பல நம்பர அம்பிகை பாகா.
  • 11. அம்பர விம்ப சிதம்பர நாதா
    அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.
  • 12. தந்திர மந்திர யந்திரபாதா
    சங்கர சங்கர சங்கர நாதா.
  • 13. கனக சிதம்பர கங்கர புரஹர
    அனக பரம்பர சங்கர ஹரஹர.
  • 14. சகல கலாண்ட சராசர காரண
    சகுண சிவாண்ட பராபர பூரண.
  • 15. இக்கரை கடந்திடில் அக்கரை யே
    இருப்பது சிதம்பர சர்க்கரை யே.
  • 16. என்னுயிர் உடம்பொடு சித்தம தே
    இனிப்பது நடராஜ புத்தமு தே.
  • 17. ஐயர் திருச்சபை ஆடக மே
    ஆடுதல் ஆனந்த நாடக மே.
  • 18. உத்தர ஞான சிதம்பர மே
    சித்திஎ லாந்தரும் அம்பரமே.
  • 19. அம்பல வாசிவ மாதே வா
    வம்பல வாவிங்கு வாவா வா.
  • 20. நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
    நல்லஎ லாம்செய வல்லவ னே.
  • 21. ஆனந்த நாடகம் கண்டோ மே - பர
    மானந்த போனகம் கொண்டோ மே.
  • 22. சகள உபகள நிட்கள நாதா
    உகள சததள மங்கள பாதா.
  • 23. சந்தத மும்சிவ சங்கர பஜனம்
    சங்கிதம் என்பது சற்சன வசனம்.
  • 24. சங்கர மும்சிவ மாதே வா
    எங்களை ஆட்கொள வாவா வா.
  • 25. அரகர சிவசிவ மாதே வா
    அருளமு தம்தர வாவா வா.
  • 26. நடனசி காமணி நவமணி யே
    திடனக மாமணி சிவமணி யே.
  • 27. நடமிடும் அம்பல நன்மணி யே
    புடமிடு செம்பல பொன்மணி யே.
  • 28. உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே
    தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே.
  • 29. நடராஜ வள்ளலை நாடுத லே
    நம்தொழி லாம்விளை யாடுத லே.
  • 30. அருட்பொது நடமிடு தாண்டவ னே
    அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே.
  • 31. நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
    நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே.
  • 32. நடராஜ பலமது நம்பல மே
    நடமாடு வதுதிரு அம்பல மே.
  • 33. நடராஜர் பாட்டே நறும்பாட்டு
    ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
  • 34. சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
    ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.
  • 35. அம்பலப் பாட்டே அருட்பாட்டு
    அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு.
  • 36. அம்பல வாணணை நாடின னே
    அவனடி யாரொடும் கூடின னே.
  • 37. தம்பத மாம்புகழ் பாடின னே
    தந்தன என்றுகூத் தாடின னே.
  • 38. நான்சொன்ன பாடலும் கேட்டா ரே
    ஞான சிதம்பர நாட்டா ரே.
  • 39. இனித்துயர் படமாட்டேன் விட்டே னே
    என்குரு மேல்ஆணை இட்டே னே.
  • 40. இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே
    என்னப்பன் மேல்ஆணை இட்டே னே.
  • 41. சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்
    சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்.
  • 42. நாதாந்த நாட்டுக்கு நாயக ரே
    நடராஜ ரேசபா நாயக ரே.
  • 43. நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
    நடராஜ எனில்வரும் நித்திய மே.
  • 44. நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே
    நல்வரம் ஈயும் தயாநிதி யே.
  • 45. நடராஜர் தம்நடம் நன்னட மே
    நடம்புரி கின்றதும் என்னிட மே.
  • 46. சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
    திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
  • 47. சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
    சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.
  • 48. இறவா வரம்தரு நற்சபை யே
    எனமறை புகழ்வது சிற்சபை யே.
  • 49. என்இரு கண்ணுள் இருந்தவ னே
    இறவா தருளும் மருந்தவ னே.
  • 50. சிற்சபை அப்பனை உற்றே னே
    சித்திஎ லாம்செயப் பெற்றே னே.
  • 51. அம்பல வாணர்தம் அடியவ ரே
    அருளர சாள்மணி முடியவ ரே.
  • 52. அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
    ஆனந்தத் தெள்ளமு துண்டே னே.
  • 53. இருட்பெரு மாயையை விண்டே னே
    எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே.
  • 54. கருணா நிதியே குணநிதி யே
    கதிமா நிதியே கலாநிதி யே.
  • 55. தருணா பதியே சிவபதி யே
    தனிமா பதியே சபாபதி யே.
  • 56. கருணா நிதியே சபாபதி யே
    கதிமா நிதியே பசுபதி யே.
  • 57. சபாபதி பாதம் தபோப்ர சாதம்
    தயாநிதி போதம் சதோதய வேதம்.
  • 58. கருணாம் பரவர கரசிவ பவபவ
    அருணாம் பரதர ஹரஹர சிவசிவ.
  • 59. கனகா கரபுர ஹரசிர கரதர
    கருணா கரபர சுரவர ஹரஹர.
  • 60. கனக சபாபதி பசுபதி நவபதி
    அனக உமாபதி அதிபதி சிவபதி.
  • 61. வேதாந்த பராம்பர ஜயஜய
    நாதாந்த நடாம்பர ஜயஜய.
  • 62. ஏகாந்த சர்வேத சமோதம
    யோகாந்த நடேச நமோநம.
  • 63. ஆதாம்பர ஆடக அதிசய
    பாதாம்புஜ நாடக ஜயஜய.
  • 64. போதாந்த புரேச சிவாகம
    நாதாந்த நடேச நமோநம.
  • 65. ஜால கோலகன காம்பர சாயக
    கால காலவன காம்பர நாயக.
  • 66. நாத பாலசு லோசன வர்த்தன
    ஜாத ஜாலவி மோசன நிர்த்தன.
  • 67. சதபரி சதவுப சதமத விதபவ
    சிதபரி கதபத சிவசிவ சிவசிவ.
  • 68. அரகர வரசுப கரகர பவபவ
    சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ.
  • 69. உபல சிரதல சுபகண வங்கண
    சுபல கரதல கணபண கங்கண.
  • 70. அபயவ ரதகர தலபுரி காரண
    உபயப ரதபத பரபரி பூரண.
  • 71. அகரஉ கரசுப கரவர சினகர
    தகரவ கரநவ புரசிர தினகர.
  • 72. வகரசி கரதின கரசசி கரபுர
    மகரஅ கரவர புரஹர ஹரஹர.
  • 73. பரமமந் திரசக ளாகன கரணா
    படனதந் திரநிக மாகம சரணா.
  • 74. அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா
    அகண்டவே தசிர கரதர பலிதா.
  • 75. பரிபூரண ஞானசி தம்பர
    பதிகாரண நாதப ரம்பர.
  • 76. சிவஞானப தாடக நாடக
    சிவபோதப ரோகள கூடக.
  • 77. சகல லோகபர காரக வாரக
    சபள யோகசர பூரக தாரக.
  • 78. சத்வ போதக தாரண தன்மய
    சத்ய வேதக பூரண சின்மய.
  • 79. வரகே சாந்த மகோதய காரிய
    பரபா சாந்த சுகோதய சூரிய.
  • 80. பளித தீபக சோபித பாதா
    லளித ரூபக ஸ்தாபித நாதா.
  • 81. அனிர்த341 கோபகரு ணாம்பக நா தா
    அமிர்த ரூபதரு ணாம்புஜ பா தா.
  • 82. அம்போ ருகபத அரகர கங்கர
    சம்போ சிவசிவ சிவசிவ சங்கர.
  • 83. சிதம்பிர காசா பரம்பிர கா சா
    சிதம்ப ரேசா சுயம்பிர கா சா.
  • 84. அருட்பிர காசம் பரப்பிர காசம்
    அகப்பிர காசம் சிவப்பிர காசம்.
  • 85. நடப்பிர காசம் தவப்பிர காசம்
    நவப்பிர காசம் சிவப்பிர காசம்.
  • 86. நாத பரம்பர னே பர - நாத சிதம்பர னே
    நாத திகம்பர னே தச - நாத சுதந்தர னே.
  • 87. ஞான நடத்தவ னே பர - ஞானிஇ டத்தவ னே
    ஞான வரத்தவ னே சிவ - ஞான புரத்தவ னே.
  • 88. ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே
    தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே.
  • 89. புத்தம்தரும் போதா வித்தம்தரும் தாதா
    நித்தம்தரும் பாதா சித்தம்திரும் பாதா.
  • 90. நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
    நடராஜ நடராஜ நடராஜ நிதியே.
  • 91. நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
    நடராஜ நடராஜ நடராஜ குருவே.
  • 92. நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
    நடராஜ நடராஜ நடராஜ பலமே.

    • 339. ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும் "அம்பலத்தரசே" முதலாகநாமாவளி தொடங்குகிறது. ஆ. பா. பதிப்பில் மட்டும் இவ்விரண்டு நாமாவளிகளும்முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக வைக்கப்பெற்றுள்ளது.இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார்இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு நாமாவளிகள் காணப்பெறுவதாயும்,கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும், அவற்றில் "அம்பலத்தரசே"என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார். இப்பதிப்பில் இவ்விருநாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக் காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும் காப்பாகக்கொள்ளலாம்.
    • 340. சவுதய - ஆ. பா. பதிப்பு.
    • 341. அனுர்த - ச. மு. க. பதிப்பு.

அம்பலத்தரசே // அம்பலத்தரசே