13. உலகம் ஏத்திநின் றோங்க ஓங்கிய ஒளிகொள் மன்றிடை அளிகொள்மாநடம்
இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே
திலக வாணுத லார்க்கு ழன்றனை தீமை யேபுரிந் தாய்வி ரிந்தனை
கலக மேகனிந்தாய் என்னை காண்நின் கடைக்க ருத்தே.
19. சென்னைச் சபாபதி முதலியார் வீட்டுத் திருமண அழைப்புத் தொடர்பாகச் செய்தபாடல் என இது ஒரு தனிப்பாடலாகவும் வழங்குகிறது. தொ.வே 1,2, ச.மு.கபதிப்புகளில் இது இப்பதிகத்தில் சேரவில்லை. ஆ.பா.பதிப்பில் மட்டும் சேர்ந்திருக்கிறது.