திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிவானந்தப் பத்து
sivāṉantap pattu
தவத்திறம் போற்றல்
tavattiṟam pōṟṟal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

028. சந்நிதி முறையீடு
sanniti muṟaiyīṭu

    திருவொற்றியூரும் திருத்தில்லையும்
    கலி விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஒற்றி மேவிய உத்தம னேமணித்
    தெற்றி மேவிய தில்லையப் பாவிழி
    நெற்றி மேவிய நின்மல னேஉனைப்
    பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே.
  • 2. பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க்
    காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன்
    மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல்
    ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே.
  • 3. ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய்
    சோதி யேதிருத் தோணிபு ரத்தனே
    ஓதி யேதரும் ஒற்றியப் பாஇது
    நீதி யேஎனை நீமரு வாததே.
  • 4. வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர்
    காதம் ஓடும் கடியனை ஆள்வது
    நீத மோஅன்றி நேரும்அ நீதமோ
    ஓதம் ஓதொலி ஒற்றித்த லத்தனே.
  • 5. தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக்
    கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே
    நலத்த னேஒற்றி நாயக னேஇந்த
    மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே.
  • 6. மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம்
    ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றியப் பாஉன்தன்
    ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக்
    கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே.
  • 7. உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
    செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
    பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
    எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே.
  • 8. எந்தை யேதில்லை எம்இறை யேகுகன்
    தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன்
    முந்தை ஏழ்பவ மூடம யக்கறச்
    சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே.
  • 9. திருந்த நான்மறைத் தில்லைச்சிற் றம்பலத்
    திருந்த ஞானஇ யல்ஒளி யேஒற்றிப்
    பொருந்த நின்றருள் புண்ணிய மேஇங்கு
    வருந்த என்தனை வைத்தத ழகதோ.
  • 10. வைத்த நின்அருள் வாழிய வாழிய
    மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே
    உய்த்த நல்அருள் ஒற்றியப் பாஎனைப்
    பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே.
  • 11. போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச்
    சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத்
    தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை
    ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே.

    • 30. வஞ்சி விருத்தம். தொ. வே. 1.ச.மு.க. கலி விருத்தம். தொ.வே. 2. ஆ.பா.

சந்நிதி முறையீடு // சந்நிதி முறையீடு

No audios found!