திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நாரையும் கிளியும் நாட்டுறு தூது
nāraiyum kiḷiyum nāṭṭuṟu tūtu
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

001. திரு உலாப் பேறு
tiru ulāp pēṟu

    தலைவி பாங்கியொடு கிளத்தல் திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிதனை
    ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன்காண்
    வாரார் முலைகண் மலைகளென வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
    ஏரார் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
  • 2. சீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
    பார்த்தேன் கண்கள் இமைத்திலகாண் பைம்பொன் வளைகள் அமைத்திலகாண்
    தார்த்தேன் குழலும் சரிந்தனகாண் தானை இடையிற் பிரிந்தனகாண்
    ஈர்த்தேன் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
  • 3. சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் தியாகப் பெருமான் திருமாட
    வீதிப் பவனி வரக்கண்டேன் மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன்
    போதிற் றெனவும் உணர்ந்திலேன் பொன்ன னார்பின் போதுகிலேன்
    ஈதற் புதமே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
  • 4. தென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்
    பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
    மின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு
    என்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
  • 5. சீலக் குணத்தோர் புகழ்ஒற்றித் தியாகப் பெருமான் பவனிஇராக்
    காலத் தடைந்து கண்டேன்என் கண்கள் இரண்டோ ஆயிரமோ
    ஞாலத் தவர்கள் அலர்தூற்ற நற்று‘ சிடையில் நழுவிவிழ
    ஏலக் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
  • 6. சேயை அருளுந் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில்
    தூய பவனி வரக்கண்டேன் சூழ்ந்த மகளிர் தமைக்காணேன்
    தாயை மறந்தேன் அன்றியும்என் தனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
    ஏயென் தோழி என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
  • 7. திங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி
    அங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்
    தங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
    எங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
  • 8. தேசார் மணிசூழ் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரக்
    கூசா தோடிக் கண்டரையில் கூறை இழந்தேன் கைவளைகள்
    வீசா நின்றேன் தாயரெலாம் வீட்டுக் கடங்காப் பெண்எனவே
    ஏசா நிற்க என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
  • 9. தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத்
    தோடார் பணைத்தோட் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
    வாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சேர்ந்ததுடன்
    ஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
  • 10. திருமாற் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
    பெருமான் மனமு நானும்முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
    பொருமா நின்றேன் தாயரெலாம் போஎன் றீர்க்கப் போதுகிலேன்
    இருண்மாண் குழலாய் என்னடிநான் இச்சைமயமாய் நின்றதுவே.

திரு உலாப் பேறு // திரு உலாப் பேறு

No audios found!