திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இராமநாமப் பதிகம்
irāmanāmap patikam
இரேணுகை பஞ்சகம்
irēṇukai pañsakam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

063. வீரராகவர் போற்றிப் பஞ்சகம்
vīrarākavar pōṟṟip pañsakam

  திருஎவ்வுளூர்
  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
  வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
  அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
  விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.
 • 2. பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
  நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
  தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
  வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
 • 3. மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
  கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
  ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
  வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.
 • 4. இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே
  களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
  துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
  விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
 • 5. அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
  பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
  வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
  வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

வீரராகவர் போற்றிப் பஞ்சகம் // வீரராகவர் போற்றிப் பஞ்சகம்

No audios found!