திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
விண்ணப்பக் கலிவெண்பா
viṇṇappak kaliveṇpā
சிவநேச வெண்பா
sivanēsa veṇpā
முதல் திருமுறை / First Thirumurai

003. நெஞ்சறிவுறுத்தல்
neñsaṟivuṟuttal

    காப்பு
    குறள்வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்
    பேர்சான்ற இன்பம் பெரிது.
  • 2. ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்
    பேறு மிகத்தான் பெரிது.
  • கலிவெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. பொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல்
    எந்நாளும் வாழியநீ என்னெஞ்சே - பின்னான
  • 2. இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை
    எப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே - செப்பமுடன்
  • 3. செவ்வொருசார் நின்று சிறியேன் கிளக்கின்ற
    இவ்வொருசொல் கேட்டிடுக என்னெஞ்சே - எவ்வெவ்
  • 4. உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும்
    இலகும் சிவமாய் இறையாய் - விலகும்
  • 5. உருவாய் உருவில் உருவாய் உருவுள்
    அருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய்
  • 6. நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்
    சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் - முத்தியருள்
  • 7. ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
    நன்றாய் நவமாய் நடுநிலையாய் - நின்றோங்கும்
  • 8. வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்குபர
    நாதமாய் நாதாந்த நாயகமாய் - ஓதும்
  • 9. செறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்
    அறிவாய் அறிவுள் அறிவாய் - நெறிமேவு
  • 10. காலமாய்க் காலம் கடந்த கருத்தாய்நற்
    சீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் - ஞாலம்
  • 11. பொருந்தாப் பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப்
    பெருந்தா ரகம்சூழ்ந்த பேறாய்த் - திருந்தாத
  • 12. போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
    நோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் - நீக்கமிலா
  • 13. ஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற
    சோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் - நீதியாய்
  • 14. ஆங்கார நீக்கும் அகார உகாரமதாய்
    ஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் - பாங்கான
  • 15. சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
    சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் - வித்தமாய்
  • 16. அண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா
    கண்டமாய் ஆனந்தா காரமதாய் - அண்டத்தின்
  • 17. அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மையதாய்
    எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் - செப்பாலும்
  • 18. நெஞ்சாலும் காய நிலையாலும் அந்நிலைக்குள்
    அஞ்சாலுங் காண்டற் கரும்பதமாய் - எஞ்சாப்
  • 19. பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின்
    தரமாய்ப் பரப்பிரமம் தானாய்-வரமாய
  • 20. ஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய்
    அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் - இன்பாய்
  • 21. அகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும்
    சகமாய்ச் சகமாயை தானாய் - சகமாயை
  • 22. இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும்
    கொல்லாதார்க் கின்பம் கொடுப்பதாய் - எல்லார்க்கும்
  • 23. நண்ணுவதாய் நண்ணாதாய் நல்வினையாய் அல்வினையாய்
    எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் - எண்ணுகின்ற
  • 24. வானாய் நிலனாய் வளியாய் அனலாய்நீர்
    தானாய் வழிபடுநான் தான்தானாய் - வானாதி
  • 25. ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்
    மன்றிடத்தில் என்றும் வதிவதாய் - ஒன்றியதோர்
  • 26. ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்
    எந்நிறமும் வேண்டா இயனிறமாய் - முந்நிறத்தில்
  • 27. பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்
    நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் - பூப்பதின்றி
  • 28. வாளா திருப்பதுவாய் வாதனா தீதமாய்
    நீளாது நீண்ட நிலையினதாய் - மீளாப்
  • 29. பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்
    அரிதாய் அரிதில் அரிதாய்த் - துரிய
  • 30. வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்
    ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி
  • 31. கற்பகமாய்க் காணுஞ்சங் கற்ப விகற்பமாய்
    நிற்பதா கார நிருவிகற்பாய்ப் - பொற்புடைய
  • 32. முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்
    எச்சுடரும் போதா இயற்சுடராய் - அச்சில்
  • 33. நிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்
    மறைவாய் வெளியாய் மனுவாய் - மறையாத
  • 34. சச்சிதா னந்தமதாய்த் தன்னிகரொன் றில்லாதாய்
    விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் - மெச்சுகின்ற
  • 35. யோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ
    போகமாய்ப் போகியாய்ப் போகமருள் - ஏகமாய்க்
  • 36. கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல
    கேவலங்கள் சற்றும் கிடையாதாய் - மாவலத்தில்
  • 37. காட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்
    சூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் - மாட்சிபெறச்
  • 38. செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்
    உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் - மொய்கொள்
  • 39. அதுவாய் அவளாய் அவனாய் அவையும்
    கதுவாது நின்ற கணிப்பாய்க் - கதுவாமல்
  • 40. ஐயம் திரிபோ டறியாமை விட்டகற்றிப்
    பொய்யென்ப தொன்றும் பொருந்தாராய்ச் - செய்யென்ற
  • 41. ஓர்வினையில் இன்பமுமற் றோர்வினையில் துன்பமுமாம்
    சார்வினைவிட் டோங்கும் தகையினராய்ப் - பார்வினையில்
  • 42. ஓர்பால் வெறுப்புமற்றை ஓர்பால் விருப்புமுறும்
    சார்பால் மயங்காத் தகையினராய்ச் - சார்பாய
  • 43. ஓரிடத்தில் தண்மையுமற் றோரிடத்தில் வெஞ்சினமும்
    பாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் - நீரிடத்தில்
  • 44. தண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த
    ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் - வெண்மையிலா
  • 45. ஒன்றும் அறிவின் உதயாதி ஈறளவும்
    என்றும் இரண்டென்ப தில்லவராய் - மன்றவொளிர்
  • 46. அம்மூன்றி னுள்ளே அடுக்கிவரும் ஒன்றகன்ற
    மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் - தம்மூன்றி
  • 47. வீடாது நின்றும் விரிந்தும் விகற்பநடை
    நாடாது நான்கும் நசித்தவராய் - ஊடாக
  • 48. எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்
    அஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் - எஞ்சாமல்
  • 49. ஈண்டாண் டருளும் இறையோர் தமையாறில்
    ஆண்டாண்டு கண்டா றகன்றவராய் - ஈண்டாது
  • 50. வாழியுற்ற வானோரும் வந்து தமக்கிரண்டோ
    டேழியற்ற ஏழும் இகந்தவராய் - ஊழியற்றக்
  • 51. கட்டிநின்றுட் சோதியொன்று காணத் தொடங்குகின்றோர்
    எட்டுகின்ற எட்டின்மேல் எய்தினராய்க் கட்டுகின்ற
  • 52. தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற
    சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்
  • 53. தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் - தனுவொழிந்து
    வாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற
  • 54. வாய்க்கும் சுகமொழிந்து மண்ணொழிந்து விண்ணொழிந்து
    சாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து - நீக்கொழிந்து
  • 55. நானுமொழி யாதொழிந்து ஞானமொழி யாதொழிந்து
    தானும் ஒழியாமற் றானொழிந்து - மோனநிலை
  • 56. நிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய்
    நிற்கும் பரம நிருத்தனெவன் - தற்பரமாய்
  • 57. நின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து
    சென்றான் எவன்சர்வ தீர்த்தனெவன் - வன்தீமை
  • 58. இல்லான் எவன்யார்க்கும் ஈசன் எவன்யாவும்
    வல்லான் எவனந்தி வண்ணனெவன் - கல்லாலில்
  • 59. சுட்டகன்ற ஞான சுகாதீதம் காட்டிமுற்றும்
    விட்டகன்ற யோக வினோதனெவன் - மட்டகன்ற
  • 60. அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்தருளித்
    திண்டங்கு மாறிருத்தும் சித்தனெவன் - பண்டங்கு
  • 61. வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டமெலாம்
    தேயாது கூட்டுவிக்கும் சித்தனெவன் - யாயாதும்
  • 62. வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்தமைத்
    தீண்டாது தீண்டுகின்ற சித்தனெவன் - ஈண்டோது
  • 63. பற்றுருவாய்ப் பற்றாப் பரவணுவின் உள்விளங்கும்
    சிற்றுருவாய் உள்ளொளிக்கும் சித்தனெவன் - மற்றுருவின்
  • 64. வையாது வைத்துலகை மாவிந் திரசாலம்
    செய்யாது செய்விக்கும் சித்தனெவன் - நையாமல்
  • 65. அப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும்
    செப்பிடைவைத் தாட்டுகின்ற சித்தனெவன் - ஒப்புறவே
  • 66. நில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச்
    செல்லாது வைக்கின்ற சித்தனெவன் - பொல்லாத
  • 67. வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே
    செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்
  • 68. ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்
    திண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத்
  • 69. தானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை
    தேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் - ஊனமின்றிப்
  • 70. பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்
    சேர்த்து வருவிக்கும் சித்தனெவன் - போர்த்துமிக
  • 71. அல்விரவுங் காலை அகிலமெலாம் தன்பதத்தோர்
    சில்விரலில் சேர்க்கின்ற சித்தனெவன் - பல்வகையாய்க்
  • 72. கைகலந்த வண்மைக் கருப்பா சயப்பையுள்
    செய்கருவுக் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்கருவை
  • 73. மெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும்
    செய்வித்தங் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்விக்கும்
  • 74. வித்தொன்றும் இன்றி விளைவித் தருளளிக்கும்
    சித்தென்றும் வல்லவொரு சித்தனெவன் - சத்துடனே
  • 75. உற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய்
    சிற்பத் தொழில்வல்ல சித்தனெவன் - பற்பலவாம்
  • 76. காரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச்
    சேரூழி நிற்கவைத்த சித்தனெவன் - பேராத
  • 77. நீர்மேல் நெருப்பை நிலையுறவைத் தெவ்வுலகும்
    சீர்மே வுறச்செய்யும் சித்தனெவன் - பாராதி
  • 78. ஐந்திலைந்து நான்கொருமூன் றாமிரண்டொன் றாய்முறையே
    சிந்தையுற நின்றருளும் சித்தனெவன் - பந்தமுற
  • 79. ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்
    சேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப்
  • 80. பேடாணாய்ப் பெண்ணாயப் பெண்ணாண் பெரும்பேடாய்ச்
    சேடாகச் செய்யவல்ல சித்தனெவன் - சேடாய
  • 81. வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்
    திண்மை பெறச்செய்யும் சித்தனெவன் - ஒண்மையிலா
  • 82. ஓட்டினைச்செம் பொன்னா யுயர்செம்பொன் ஓடாகச்
    சேட்டையறச் செய்கின்ற சித்தனெவன் - காட்டிலுறு
  • 83. காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்
    தேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் - வாஞ்சையுற
  • 84. நாரணன்சேய் நான்முகனாய் நான்முகன்சேய் நாரணனாய்ச்
    சீரணவச் செய்யவல்ல சித்தனெவன் - பேரணவக்
  • 85. கொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர்
    செம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் - செம்மையிலா
  • 86. வெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச்
    செம்புலியாச் செய்யவல்ல சித்தனெவன் - அம்புலியை
  • 87. அங்கதிரொண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற
    செங்கதிரைச் செய்யவல்ல சித்தனெவன் - துங்கமுறா
  • 88. ஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர்
    சீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் - வீரமுடன்
  • 89. முன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால்
    சின்னகையால் தீமடுத்த சித்தனெவன் - முன்னயன்மால்
  • 90. மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு
    சிற்றுரும்பை85 நாட்டிநின்ற சித்தனெவன் - மற்றவர்போல்
  • 91. அல்லா அயனும் அரியும் உருத்திரனும்
    செல்லா நெறிநின்ற சித்தனெவன் - ஒல்லாத
  • 92. கல்லிற் சுவையாய்க் கனியிற் சுவையிலதாய்ச்
    செல்லப் பணிக்கவல்ல சித்தனெவன் - அல்லலறப்
  • 93. பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனா தீதனெனச்
    சீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தனெவன் - மார்க்கங்கள்
  • 94. ஒன்றென்ற மேலவரை ஒன்றென் றுரைத்தவர்பால்
    சென்றொன்றி நிற்கின்ற சித்தனெவன் - அன்றொருநாள்
  • 95. கல்லானை தின்னக் கரும்பளித்துப் பாண்டியன்வீண்
    செல்லா தளித்தமகா சித்தனெவன் - சொல்லாத
  • 96. ஒன்றே இரண்டேமேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்
    சென்றே நடுநின்ற சித்தனெவன் - சென்றேறும்
  • 97. அத்திரத்தை மென்மலராய் அம்மலரை அத்திரமாய்ச்
    சித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தனெவன் - எத்தலத்தும்
  • 98. சங்கமதே86 தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச்
    செங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் - தங்குகின்ற
  • 99. சத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்
    சித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் - தத்தெல்லாம்
  • 100. நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன்னுண்மை
    காட்டாது காட்டிநிற்கும் கள்வனெவன் - பாட்டோடு
  • 101. வண்டாலுங் கொன்றை மலரோய் எனமறைகள்
    கண்டாலும் காணாத கள்வனெவன் - தொண்டாக
  • 102. அள்ளம் செறியார்க்கே அன்றி அறிவார்க்குக்
    கள்ளம் செறியாத கள்வனெவன் - எள்ளலறக்
  • 103. கொண்டவெலாந் தன்பால் கொடுக்குமவர் தம்மிடத்தில்
    கண்டவெலாம் கொள்ளைகொளுங் கள்வனெவன் - கொண்டுளத்தில்
  • 104. தன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம்
    கன்னமிடக் கைவந்த கள்வனெவன் - மண்ணுலகைச்
  • 105. சற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால்
    கற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் - முற்படுமித்
  • 106. தொண்டுலகில் உள்ளஉயிர் தோறுமொளித் தாற்றலெலாம்
    கண்டுலவு கின்றதொரு கள்வனெவன் - விண்டகலா
  • 107. மண்மயக்கும் பொன்மயக்கும் மாதர் மயக்குமெனும்
    கண்மயக்கம் காட்டிநிற்கும் கள்வனெவன் - உண்மயக்கு
  • 108. மாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய
    காசு பறிக்கின்ற கள்வனெவன் - ஆசகன்ற
  • 109. பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றைநுதற்
    கண்ணால் அழிக்கின்ற கள்வனெவன் - எண்ணாது
  • 110. நானென்று நிற்கின் நடுவேயந் நானாணத்
    தானென்று நிற்கும் சதுரனெவன் - மானென்ற
  • 111. மாயைதனைக் காட்டி மறைப்பித்தம் மாயையிற்றன்
    சாயைதனைக் காட்டும் சதுரனெவன் - நேயமுடன்
  • 112. நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும்
    தான்மறையும் மேன்மைச் சதுரனெவன் - வான்மறையாம்
  • 113. முன்னை மறைக்கும் முடிப்பொருளென் றாய்பவர்க்கும்
    தன்னை மறைக்கும் சதுரனெவன் - உன்னுகின்றோர்
  • 114. சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்
    சத்தத்திற் காட்டும் சதுரனெவன் - முத்தரென
  • 115. யாவர் இருந்தார் அவர்காண வீற்றிருக்கும்
    தேவர் புகழ்தலைமைத் தேவனெவன் - யாவர்களும்
  • 116. இவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச்
    செவ்வணத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் - மெய்வணத்தோர்
  • 117. தாம்வாழ அண்ட சராசரங்கள் தாம்வாழ
    நாம்வாழத் தன்னுரையாம் நான்மறைகள் - தாம்வாழச்
  • 118. சாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின்
    சீருருவே ஓருருவாம் தேவனெவன் - ஈருருவும்
  • 119. ஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம்
    சென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் - என்றென்றும்
  • 120. தற்சகசம் என்றே சமயம் சமரசமாம்
    சிற்சபையில் வாழ்கின்ற தேவனெவன் - பிற்படுமோர்
  • 121. பொய்விட்டு மெய்ந்நெறியைப் போற்றித்தற் போதத்தைக்
    கைவிட் டுணர்வே கடைப்பிடித்து - நெய்விட்ட
  • 122. தீப்போற் கனலும் செருக்கறவே செங்கமலப்
    பூப்போலும் தன்தாள் புணைபற்றிக் - காப்பாய
  • 123. வெண்­ றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்
    கண்­ர் அருவி கலந்தாடி- உண்­ர்மை
  • 124. என்புருகி உள்ளுருகி இன்பார் உயிருருகி
    அன்புருகி அன்புருவம் ஆகிப்பின் - வன்பகன்று
  • 125. புண்ணியா திங்கட் புரிசடையாய் பொன்னிதழிக்
    கண்ணியா எங்கள் களைகண்ணே - எண்ணியாங்
  • 126. கன்பர்க் கருளும் அரசே அமுதேபே
    ரின்பக் கடலே எமதுறவே - மன்பெற்று
  • 127. மாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே
    ஏற்றுவந்த மெய்ப்பொருளே என்றுநிதம் - போற்றிநின்றால்
  • 128. உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்
    அள்ளூறி அண்ணித் தமுதூறித் - தெள்ளூறும்
  • 129. வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல்
    தேன்போல் மதுரிக்கும் தேவனெவன் - வான்போனார்
  • 130. மாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன்
    நாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் - நாண்மலர்பெய்
  • 131. தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட
    மூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற
  • 132. ஈண்டற் புதவடிவாய் எத்தேவ ரேனுநின்று
    காண்டற் கரிதாம் கணேசனெவன் - வேண்டுற்றுப்
  • 133. பூமியெங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்புமிட்ட
    காமியங்கள் ஈயும் கணேசனெவன் - நாமியங்க
  • 134. ஏண வருமிடையூ றெல்லாம் அகற்றியருள்
    காண எமக்கீயும் கணேசனெவன் - மாணவரு
  • 135. முந்த மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்
    தந்த அருட்கடலாம் சாமியெவன் - தந்தமக்காம்
  • 136. வாதகற்றி உண்மை மரபளித்து வஞ்சமலக்
    கோதகற்றும் நெஞ்சக் குகேசனெவன் - தீதகற்றித்
  • 137. தங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்
    கங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் - எங்குறினும்
  • 138. கூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற
    பாம்பா பரணப் பரமனெவன் - கூம்பாது
  • 139. போற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடுங்
    கூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் - ஆற்றலுறு
  • 140. வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்திமுதல்
    ஐயைந்து மூர்த்தியெனும் ஐயனெவன் - ஐயந்தீர்
  • 141. வல்லார்சொல் வண்ணமெந்த வண்ணமந்த வண்ணங்கள்
    எல்லாம் உடைய விதத்தனெவன் - எல்லார்க்கும்
  • 142. தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்
    ஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள்
  • 143. எங்கெங் கிருந்துமனத் தியாது விழைந்தாலும்
    அங்கங் கிருந்தளிக்கும் அண்ணலெவன் - புங்கமிகும்
  • 144. அண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த
    கண்ணற் கருளியமுக் கண்ணனெவன் - மண்ணிடத்தில்
  • 145. ஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத்
    தாயாகி வந்த தயாளனெவன் - சேயாக
  • 146. வேல்பிடித்த கண்ணப்பன் மேவுமெச்சில் வேண்டுமிதத்
    தாற்பொசித்து நேர்ந்த தயாளனெவன் - பாற்குடத்தைத்
  • 147. தான்தந்தை என்றெறிந்தோன் தாளெறிந்த தண்டிக்குத்
    தான்தந்தை ஆன தயாளனெவன் - தான்கொண்டு
  • 148. சம்பு நறுங்கனியின் தன்விதையைத் தாள்பணிந்த
    சம்பு முனிக்கீயும் தயாளனெவன் - அம்புவியில்
  • 149. ஆண்டவனென் றேத்தப்பொன் னம்பலத்தில் ஆனந்தத்
    தாண்டவம்செய் கின்ற தயாளனெவன் - காண்தகைய
  • 150. முத்துச்சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு
    முத்தைத் தனிவைத்த முத்தனெவன் - பத்திபெறு
  • 151. நாவொன்றரசர்க்கு நாம்தருவேம் நல்லூரில்
    வாஎன்று வாய்மலர்ந்த வள்ளலெவன் - பூவொன்று
  • 152. நன்றொண்டர் சுந்தரரை நாம்தடுக்க வந்தமையால்
    வன்றொண்டன் நீஎன்ற வள்ளலெவன் - நன்றொண்டின்
  • 153. காணிக்கை யாகக் கருத்தளித்தார் தம்மொழியை
    மாணிக்கம் என்றுரைத்த வள்ளலெவன் - தாணிற்கும்
  • 154. தன்னன்பர் தாம்வருந்தில் சற்றுந் தரியாது
    மன்னன் பருளளிக்கும் வள்ளலெவன் - முன்னன்பில்
  • 155. சால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர்
    மால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் - மான்முதலோர்
  • 156. தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி
    மாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே
  • 157. நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாடரிதாம்
    செம்மைக் கதியருள்நம் தெய்வங்காண் - எம்மையினும்
  • 158. நாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும்
    தேடக் கிடையாநம் தெய்வங்காண் - நீடச்சீர்
  • 159. நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்
    செல்வந் தருநமது தெய்வம்காண் - சொல்வந்த
  • 160. எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்
    திண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் - வண்மையுற
  • 161. முப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச்
    செப்பாது செப்புறுநம் தேசிகன்காண் - தப்பாது
  • 162. தீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும்
    சேரா நெறியருள்நம் தேசிகன்காண் - ஆராது
  • 163. நித்தம் தெரியா நிலைமே வியநமது
    சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் - வித்தரென
  • 164. யாதொன்றும் தேரா திருந்தநமக் கிவ்வுலகம்
    தீதென் றறிவித்த தேசிகன்காண் - கோதின்றி
  • 165. ஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம்மை
    ஆசை யுடனீன்ற அப்பன்காண் - மாசுறவே
  • 166. வன்பாய் வளர்க்கின்ற மற்றையர்போ லல்லாமல்
    அன்பாய் நமைவளர்க்கும் அப்பன்காண் - இன்பாக
  • 167. இப்பாரில் சேயார் இதயம் மலர்ந்தம்மை
    அப்பா எனும்நங்கள் அப்பன்காண் - செப்பாமல்
  • 168. எள்ளித் திரிந்தாலும் இந்தா87 என் றின்னமுதம்
    அள்ளிக் கொடுக்குநம தப்பன்காண் - உள்ளிக்கொண்
  • 169. டின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக்
    கன்றே அருளுநம தப்பன்காண் - நன்றேமுன்
  • 170. காதரவு செய்து88 நலம் கற்பித்துப் பின்பெரிய
    ஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் - கோதுறுமா
  • 171. வஞ்சமலத் தால்வருந்தி வாடுகின்ற நந்தமையே
    அஞ்சலஞ்ச லென்றருளும் அப்பன்காண் - துஞ்சலெனும்
  • 172. நச்சென்ற வாதனையை நாளுமெண்ணி நாமஞ்சும்
    அச்சம் கெடுத்தாண்ட அப்பன்காண் - நிச்சலுமிங்8
  • 173. கேயிரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை
    ஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண் - சேயிரங்கா
  • 174. முன்னம் எடுத்தணைத்து முத்தமிட்டுப் பாலருத்தும்
    அன்னையினும் அன்புடைய அப்பன்காண் - மன்னுலகில்
  • 175. வன்மை யறப்பத்து மாதம் சுமந்துநமை
    நன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - இம்மைதனில்
  • 176. அன்றொருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது
    நன்றிரவில்சோறளித்த நற்றாய்காண் - என்றுமருட்
  • 177. செம்மை இலாச்சிறிய தேவர்கள்பால் சேர்க்காது
    நம்மை வளர்க்கின்ற நற்றாய்காண் - சும்மையென
  • 178. மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்
    நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற
  • 179. வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை
    நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் - செந்நெறியின்
  • 180. நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை
    நாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் - ஆம்தோறும்
  • 181. காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்
    ஞாலம் மிசையளிக்கும் நற்றாய்காண் - சாலவுறு
  • 182. வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யும்துயரும்
    நம்பசியும் தீர்த்தருளும் நற்றாய்காண் - அம்புவியில்
  • 183. வெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம்
    நன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் - எந்நீரின்
  • 184. மேலாய் நமக்கு வியனுலகில் அன்புடைய
    நாலா யிரம்தாயில் நற்றாய்காண் - ஏலாது
  • 185. வாடியழு தாலெம் வருத்தம் தரியாது
    நாடிஎடுத் தணைக்கும் நற்றாய்காண் - நீடுலகில்
  • 186. தான்பாடக்கேட்டுத் தமியேன் களிக்குமுன்னம்
    நான்பாடக்கேட்டுவக்கும் நற்றாய்காண் - வான்பாடும்
  • 187. ஞானமணம் செய்யருளாம் நங்கைதனைத் தந்துநமக்
    கானமணம் செய்விக்கும் அம்மான்காண் - தேனினொடும்
  • 188. இன்பால் அமுதாதி ஏக்கமுற இன்னருள்கொண்
    டன்பால் விருந்தளிக்கும் அம்மான்காண் - வன்பாவ
  • 189. ஆழ்கடல்வீழ்ந் துள்ளம் அழுந்தும் நமையெடுத்துச்
    சூழ்கரையில் ஏற்றும் துணைவன்காண் - வீழ்குணத்தால்
  • 190. இன்பம் எனைத்தும் இதுவென் றறியாநம்
    துன்பம் துடைக்கும் துணைவன்காண் - வன்பவமாம்
  • 191. தீநெறியிற் சென்று தியங்குகின்ற நந்தமக்குத்
    தூநெறியைக் காட்டும் துணைவன்காண் - மாநிலத்தில்
  • 192. இன்றுதொட்ட தன்றி யியற்கையாய் நந்தமக்குத்
    தொன்றுதொட்டு வந்தவருட் சுற்றங்காண் - தொன்றுதொட்டே
  • 193. ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த
    நேயம்வைத்த நம்முடைய நேசன்காண் - பேயரென
  • 194. வாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு
    நீங்காத நம்முடைய நேசன்காண் - தீங்காக
  • 195. ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை
    நீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் - கூட்டுலகில்
  • 196. புல்லென்ற மாயையிடைப் போந்தோறும் நம்மையிங்கு
    நில்லென் றிருத்துகின்ற நேசன்காண் - சில்லென்றென்
  • 197. உட்டூவும் தன்னைமறந் துண்டாலும் மற்றதற்கு
    நிட்டூரம் செய்யாத நேசன்காண் - நட்டூர்ந்து9
  • 198. வஞ்சமது நாமெண்ணி வாழ்ந்தாலும் தான்சிறிதும்
    நெஞ்சிலது வையாத நேசன்காண் - எஞ்சலிலாப்
  • 199. பார்நின்ற நாம்கிடையாப் பண்டமெது வேண்டிடினும்
    நேர்நின் றளித்துவரு நேசன்காண் - ஆர்வமுடன்
  • 200. ஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்
    நேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் - சேர்ந்துமிகத்
  • 201. தாபஞ்செய் குற்றம் தரினும் பொறுப்பதன்றிக்
    கோபஞ் செயாநமது கோமான்காண் - பாபமற
  • 202. விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்
    கொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற
  • 203. உண்டளிக்கும் ஊணுடைபூண் ஊரா திகள்தானே
    கொண்டுநமக் கிங்களிக்கும் கோமான்காண் - மண்டலத்தில்
  • 204. ஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச்
    சென்றாலும் செல்லாநம் செல்வம்காண் - முன்தாவி
  • 205. நாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து
    தேடிவைத்த நம்முடைய செல்வம்காண் - மாடிருந்து
  • 206. நாமெத் தனைநாளும் நல்கிடினும் தானுலவாச்
    சேமித்த வைப்பின் திரவியம்காண் - பூமிக்கண்
  • 207. ஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா
    தோங்கருளால் நம்மை உடையவன்காண் - ஆங்கவன்தன்
  • 208. கங்கைச் சடையழகும் காதன்மிகும் அச்சடைமேல்
    திங்கட் கொழுந்தின் திருவழகும் - திங்கள்தன்மேல்
  • 209. சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்
    ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்
  • 210. நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்
    போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் - தேக்குதிரி
  • 211. புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக்
    கண்டவர்பால் ஊற்றுகின்ற கண்ணழகும் - தொண்டர்கள்தம்
  • 212. நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த
    நாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற
  • 213. முல்லை முகையாம் முறுவலழ கும்பவள
    எல்லை வளர்செவ் விதழழகும் - நல்லவரைத்
  • 214. தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
    வாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும்
  • 215. கோன்பரவும் சங்கக் குழையழகும் அன்பர்மொழித்
    தேன்பரவும் வள்ளைச் செவியழகும் - நான்பரவி
  • 216. வேட்டவையை நின்றாங்கு விண்ணப்பம் செய்யவது
    கேட்டருளும் வார்செவியின் கேழழகும் - நாட்டிலுயர்
  • 217. சைவம் முதலாய்த் தழைக்க அருள்சுரக்கும்
    தெய்வ முகத்தின் திருவழகும் - தெய்வமுகத்
  • 218. துள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக்
    கொள்ளும் கருணைக் குறிப்பழகும் - உள்ளறிவின்
  • 219. எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்
    தெள்ளார் அமுதச் சிரிப்பழகும் - உள்ளோங்கும்
  • 220. சீல அருளின் திறத்துக் கிலச்சினையாம்
    நீல மணிமிடற்றின் நீடழகும் - மாலகற்றி
  • 221. வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்­று
    சூழ்ந்தொளிகொண் டோங்குதிருத் தோளழகும் - தாழ்ந்திலவாய்த்
  • 222. தானோங்கும் அண்டமெலாம் சத்தமுறக் கூவுமொரு
    மானோங்கும் செங்கை மலரழகும் - ஊனோங்கும்
  • 223. ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக்
    காணவைத்த செங்கமலக் கையழகும் - நாணமுற்றே
  • 224. ஏங்கும் பரிசுடைய எம்போல்வார் அச்சமெலாம்
    வாங்கும் அபய மலரழகும் - தீங்கடையாச்
  • 225. சீர்வரவும் எல்லாச் சிறப்பும் பெறவுமருள்
    சார்வரத வொண்கைத் தலத்தழகும் - பேரரவப்
  • 226. பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்
    மாணிலங்க மேவுதிரு மார்பழகும் - சேணிலத்தர்
  • 227. மேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத்
    தோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் - பாலடுத்த
  • 228. கேழ்க்கோல மேவுதிருக் கீளழகும் அக்கீளின்
    கீழ்க்கோ வணத்தின் கிளரழகும் - கீட்கோலம்
  • 229. ஒட்டிநின்ற மெய்யன்பர் உள்ள மெலாஞ்சேர்த்துக்
    கட்டிநின்ற வீரக் கழலழகும் - எட்டிரண்டும்
  • 230. சித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று
    தித்திக்கும் சேவடியின் சீரழகும் - சத்தித்து
  • 231. மல்வைத்த மாமறையும் மாலயனும் காண்பரிய
    செல்வத் திருவடியின் சீரழகும் - சொல்வைத்த
  • 232. செம்மை மணிமலையைச் சேர்ந்த - மரகதம்போல்
    அம்மையொரு பால்வாழ்ந் தருளழகும் - அம்மமிகச்
  • 233. சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும்
    பார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் - தீர்த்தருளம்
  • 234. கொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங்
    கண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் - தொண்டடைந்து
  • 235. பாட்டால் அவன்புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று
    கேட்டால் வினைகள்விடை கேட்கும்காண் - நீட்டாமல்
  • 236. ஒன்னார் புரம்பொடித்த உத்தமனே என்றொருகால்
    சொன்னா லுலகத் துயரறுங்காண் - எந்நாளும்
  • 237. பன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால்
    உன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் - அன்னவன்றன்
  • 238. ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்
    நீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன்
  • 239. மாற்கடவு ளாமோர் மகவலறக் கண்டுதிருப்
    பாற்கடலை யீந்தவருட் பான்மைதனை - நூற்கடலின்
  • 240. மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
    புத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முத்திநெறி
  • 241. மாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த
    வாணாள்91 வழங்கியதோர் வண்மைதனை - நாணாளும்
  • 242. நண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப்
    புண்ணியருக் கீதொன்றும் போதாதோ - புண்ணியராம்
  • 243. சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான்தெரிக்க
    வந்திரப்புச் சோறளித்த வண்மைதனை - முந்தகத்தில்
  • 244. பேதமறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்படையப்
    போதமுளோர்க் கீதொன்றும் போதாதோ - போதவும்நெய்
  • 245. அங்கோர் எலிதான் அருந்தவகல் தூண்டவதைச்
    செங்கோலன் ஆக்கியவச் சீர்த்திதனை - இங்கோதச்
  • 246. சந்ததம்நீ கேட்டுமவன் தாள்நினையாய் அன்படையப்
    புந்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முந்தவரும்
  • 247. நற்றுணையென் றேத்துமந்த நாவரசர்க் கன்றுகடற்
    கற்றுணை92யோர் தெப்பமெனக் காட்டியதை - இற்றெனநீ
  • 248. மாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
    பூவுலகர்க் கீதொன்றும் போதாதோ - தாவுநுதல்
  • 249. கண்சுமந்தான் அன்பன் கலங்கா வகைவைகை
    மண்சுமந்தான் என்றுரைக்கும் வாய்மைதனைப் - பண்புடையோர்
  • 250. மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு
    பூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகத்
  • 251. தீங்குறுமா பாதகத்தைத் தீர்த்தோர் மறையவனைப்
    பாங்கடையச் செய்தஅருட் பண்பதனை - ஈங்குலகர்
  • 252. துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு
    பொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப்
  • 253. பாரறியாத் தாயாகிப் பன்றிக் குருளைகட்கு
    ஊரறிய நன்முலைப்பால் ஊட்டியதைச் - சீரறிவோர்
  • 254. சொல்லிநின்றார் கேட்டும் துதிக்கின் றிலையன்பு
    புல்லஎன்றால் ஈதொன்றும் போதாதோ - நல்லதிருப்
  • 255. பாத மலர்வருந்தப் பாணன் தனக்காளாய்க்
    கோதில்விற கேற்றுவிலை கூறியதை - நீதியுளோர்
  • 256. சாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில்
    போற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ - போற்றுகின்ற
  • 257. ஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு
    தேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் - நீடுகின்ற
  • 258. பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை
    ஓம்புவதற் கியார்தா முவவாதார் - சோம்புறுநீ
  • 259. வன்பென்ப தெல்லாம் மறுத்தவன்தாள் பூசிக்கும்
    அன்பென்பதி யாதோ அறியாயே - அன்புடனே
  • 260. செஞ்சடைகொள் நம்பெருமான் சீர்கேட் டிரையருந்தா
    தஞ்சடக்கி யோகம் அமர்ந்துலகின் - வஞ்சமற
  • 261. நாரையே முத்தியின்பம் நாடியதென் றால்மற்றை
    யாரையே நாடாதார் என்றுரைப்பேன் - ஈரமிலாய்
  • 262. நீயோ சிறிதும் நினைந்திலைஅவ் வின்பமென்னை
    யேயோநின் தன்மை இருந்தவிதம் - ஓயாத
  • 263. அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்
    நின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் - உன்புடையோர்
  • 264. அன்பவன்மேல் கொண்ட தறியேன் புறச்சமயத்
    தின்புடையா ரேனும் இணங்குவரே - அன்புடனே
  • 265. தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்
    ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால்
  • 266. நின்றாய் அலதவனை நேர்ந்துநினை யாய்பித்தர்
    என்றாலும் என்சொற் கிணங்குவரே - குன்றாது
  • 267. பித்தா எனினும் பிறப்பறுப்பான் நம்முடையான்
    அத்தோ93உனக்கீ தறைகின்றேன் - சற்றேனும்
  • 268. கேள்வியிலார் போலதனைக் கேளாய் கெடுகின்றாய்
    வேள்வியிலார் கூட்டம் விழைகின்றாய் - வேள்வியென்ற
  • 269. வேலைவருங் காலொளித்து மேவுகின்றாய் நின்தலைக்கங்
    கோலைவருங் காலிங் கொளிப்பாயே - மாலையுறும்
  • 270. இப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச்
    செப்பா முனம்விரைந்து செல்கின்றாய் - அப்பாழில்
  • 271. செல்லாதே சைவநெறி செல்லென்றால் என்னுடனும்
    சொல்லாது போய்மயக்கம் தோய்கின்றாய் - பொல்லாத
  • 272. அஞ்ச94ருந்தென் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால்
    நஞ்சருந்தென் றாற்போல் நலிகின்றாய் - வஞ்சகத்தில்
  • 273. ஓடுகின்றாய் மீளாமல் உன்னிச்சை யின்வழியே
    ஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் - நீடுலகைச்
  • 274. சூழ்கின்றாய் வேறொன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்
    வீழ்கின்றாய் மேலொன்றில் மீள்கின்றாய் - தாழ்வொன்றே
  • 275. ஈகின்றாய் வன்னெறியில் என்னை வலதழிக்கப்
    போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் - யோகின்றி
  • 276. ஒன்றைமறைக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென்
    நன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் - வென்றிபெறும்
  • 277. சேவிற் பரமன்தாள் சேரென்றால் மற்றொருசார்
    மேவிப் பலவாய் விரிகின்றாய் - பாவித்துக்
  • 278. குன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும்
    ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் - நன்றுருகாக்
  • 279. கல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக்
    கல்லென்றால் என்சொல் கடவாதே - புல்லநினை
  • 280. வல்லிரும்பென் பேன்அந்த வல்லிரும்பேல் கூடத்தில்
    கொல்லன்குறிப் பைவிட்டுக் கோணாதே - அல்லலெலாம்
  • 281. கூட்டுகின்ற வன்மைக் குரங்கென்பேன் அக்குரங்கேல்
    ஆட்டுகின்றோன் சொல்வழிவிட் டாடாதே - நீட்டுலகர்
  • 282. ஏசுகின்ற பேயென்பேன் எப்பேயும் அஞ்செழுத்தைப்
    பேசுகின்றோர் தம்மைப் பிடியாதே - கூசுகிற்பக்
  • 283. கண்டோரைக் கவ்வுங் கடுஞ்சுணங்கன் என்பனது
    கொண்டோரைக் கண்டால் குலையாதே - அண்டார்க்கும்
  • 284. பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்
    மேவில் வயப்பட்டால் எதிராதே - நோவியற்றி
  • 285. வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்
    ஏறுகின்றோன்95 சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற
  • 286. வென்னடைசேர்96 மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும்
    மன்னவன்சேர் நாட்டில் வழங்காதே - நின்னையினி
  • 287. என்னென்பேன் என்மொழியை ஏற்றனையேல் மாற்றுயர்ந்த
    பொன்னென்பேன் என்வழியில் போந்திலையே - கொன்னுறநீ
  • 288. போம்வழியும் பொய்நீ புரிவதுவும் பொய்அதனால்
    ஆம்விளைவும் பொய்நின் னறிவும்பொய் - தோம்விளைக்கும்
  • 289. நின்னுடலும் பொய்யிங்கு நின்தவமும் பொய்நிலையா
    நின்னிலையும் பொய்யன்றி நீயும்பொய் - என்னிலிவண்
  • 290. ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்
    வாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ
  • 291. வன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற்
    றென்னே அறியாமல் இட்டழைத்தேன் - கொன்னேநீ
  • 292. நோவ தொழியா நொறிற்98 காம வெப்பினிடை
    ஆவ தறியா தழுந்தினையே - மேவுமதில்
  • 293. உள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல்
    நள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப - விள்வதின்றி
  • 294. வாடிப் பிலஞ்சென்று வான்சென் றொளித்தாலும்
    தேடிச் சுடுங்கொடிய தீக்கண்டாய் - ஓடிஅங்கு
  • 295. பேர்ந்தால் அலது பெருங்காமத் தீநின்னைச்
    சேர்ந்தா ரையுஞ்சுடும்செந் தீக்கண்டாய் - சார்ந்தாங்கு
  • 296. சந்தீ யெனவருவார் தம்மைச் சுடுங்காமஞ்
    செந்தீ யையுஞ் சுடுமோர் தீக்கண்டாய் - வந்தீங்கு
  • 297. மண்ணில் தனைக்காணா வண்ணம் நினைத்தாலும்
    நண்ணித் தலைக்கேறு நஞ்சங்காண் - எண்ணற்ற
  • 298. போருறுமுட் காமப் புதுமயக்கம் நின்னுடைய
    பேரறிவைக் கொள்ளைகொளும் பித்தங்காண் - சோரறிவில்
  • 299. கள்ளடைக்கும் காமக் கடுமயக்கம் மெய்ந்நெறிக்கோர்
    முள்ளடைக்கும் பொல்லா முரண்கண்டாய் - அள்ளலுற
  • 300. ஏதமெலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின்
    பேதமெலாம் ஒன்றிப் பிறப்பிடங்காண் - ஆதலினால்
  • 301. வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்
    தம்மாசை இன்னும் தவிர்ந்திலையே - இம்மாய
  • 302. மன்ற வணங்கினர்செவ் வாய்மடவார் பேதையர்கள்
    என்றகொடுஞ் சொற்பொருளை எண்ணிலையே - தொன்றுலகில்
  • 303. பெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம்
    எண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே - பெண்ணிங்கு
  • 304. மாமாத் திரையின் வருத்தனமென் றெண்ணினைஅந்
    நாமார்த்தம் ஆசையென நாடிலையே - யாமார்த்தம்
  • 305. மந்திரத்தும் பூசை மரபினுமற் றெவ்விதமாம்
    தந்திரத்தும் சாயாச் சழக்கன்றோ - மந்திரத்தில்
  • 306. பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்
    நாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே - ஆய்விலுன்றன்
  • 307. ஏழைமைஎன் னென்பேன் இவர்மயக்கம் வல்நரகின்
    தோழைமையென் றந்தோ துணிந்திலையே - ஊழமைந்த
  • 308. காரிருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர்சூழல்
    பேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே - பாரிடையோர்
  • 309. எண்வாள் எனிலஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்
    கண்வாள் அறுப்பக் கனிந்தனையே - மண்வாழும்
  • 310. ஓரானை யைக்கண்டால் ஓடுகின்றாய் மாதர்முலை
    ஈரானை யைக்கண் டிசைந்தனையே - சீரான
  • 311. வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை
    வெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும்
  • 312. சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச்
    சிங்கமெனில் காணத் திரும்பினையே - இங்குசிறு
  • 313. பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல்
    பாம்பென்றால் சற்றும் பயந்திலையே - ஆம்பண்டைக்
  • 314. கீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்
    பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே - கீழ்க்கதுவும்
  • 315. கல்லென்றால் பின்னிடுவாய் காரிகையார் காற்சிலம்பு
    கல்லென்றால் மேலெழும்பக் கற்றனையே - அல்அளகம்
  • 316. மையோ கருமென் மணலோஎன் பாய்மாறி
    ஐயோ நரைப்ப தறிந்திலையோ - பொய்யோதி
  • 317. ஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்
    வெண்பிறையன் றேயதனை விண்டிலையே - கண்புருவம்
  • 318. வில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்
    சொல்லென்றால் சொல்லத் துணியாயே - வல்லம்பில்
  • 319. கட்கு வளைஎன்றாய்க் கண்­ர் உலர்ந்துமிக
    உட்குழியும் போதில் உரைப்பாயே - கட்குலவு
  • 320. மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்
    உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ - எய்த்தலிலா
  • 321. வள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ
    டுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ - வெள்ளைநகை
  • 322. முல்லையென்றாய் முல்லை முறித்தொருகோல் கொண்டுநிதம்
    ஒல்லை அழுக்கெடுப்ப துண்டேயோ - நல்லதொரு
  • 323. கொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும்
    செவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே - செவ்வியகண்
  • 324. ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்
    வாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே - கூடியதோர்
  • 325. அந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள்
    எந்தமதிக் குண்டதனை எண்ணிலையே - நந்தெனவே
  • 326. கண்டமட்டும் கூறினைஅக் கண்டமட்டும் அன்றியுடல்
    கொண்டமட்டும் மற்றதன்மெய்க் கூறன்றோ - விண்டவற்றைத்
  • 327. தோளென் றுரைத்துத் துடிக்கின்றாய் அவ்வேய்க்கு
    மூளொன்று வெள்ளெலும்பின் மூட்டுண்டே - நாளொன்றும்
  • 328. செங்காந்தள் அங்கையெனச் செப்புகின்றாய் அம்மலர்க்குப்
    பொங்காப் பலவிரலின் பூட்டுண்டே - மங்காத
  • 329. செவ்விளநீர் கொங்கையெனச் செப்பினைவல் ஊன்றடிப்பிங்
    கெவ்விளநீர்க் குண்டதனை எண்ணிலையே - செவ்வைபெறும்
  • 330. செப்பென் றனைமுலையைச் சீசீ சிலந்தி100யது
    துப்பென் றவர்க்கியாது சொல்லுதியே - வப்பிறுகச்10
  • 331. சூழ்ந்தமுலை மொட்டென்றே துள்ளுகின்றாய் கீழ்த்துவண்டு
    வீழ்ந்தமுலைக் கென்ன விளம்புதியே - தாழ்ந்தஅவை
  • 332. மண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதிர்ந்துடையாப்
    புண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே102 - திண்கட்டும்
  • 333. அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்
    செந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே - அந்நீரார்
  • 334. கண்­ர் தரும்பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக
    வெண்­ர் வரல்கண்டும் வெட்கிலையே - தண்­ர்மைச்
  • 335. சாடியென்பாய் நீஅயலோர் தாதுக் கடத்திடுமேன்
    மூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ - மேடதனை10
  • 336. ஆலிலையே என்பாய் அடர்குடரோ டீருளொடும்
    தோலிலையே ஆலிலைக்கென் சொல்லுதியே - நு‘லிடைதான்
  • 337. உண்டோ இலையோஎன் றுட்புகழ்வாய் கைதொட்டுக்
    கண்டோர்பூட்105 டுண்டென்பார் கண்டிலையே - விண்டோங்கும்
  • 338. ஆழ்ங்கடலென் பாய்மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள்
    பாழ்ங்கிணறென் பாரதனைப் பார்த்திலையே - தாழ்ங்கொடிஞ்சித்
  • 339. தேராழி என்பாயச் சீக்குழியை அன்றுசிறு
    நீராழி யென்பவர்க்கென் நேருதியே106 - ஆராப்புன்
  • 340. நீர்வீழியை ஆசை நிலையென்றாய் வன்மலம்தான்
    சோர்வழியை என்னென்று சொல்லுதியே - சார்முடைதான்
  • 341. ஆறாச் சிலைநீர்கான் ஆறாய் ஒழுக்கிடவும்
    வீறாப்புண் என்று விடுத்திலையே - ஊறாக்கி
  • 342. மூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல்
    சீலையிடக் கண்டும் தெரிந்திலையே - மேலையுறு
  • 343. மேநரகம் என்றால் விதிர்ப்புறுநீ மாதரல்குல்
    கோநரகம் என்றால் குலைந்திலையே - ஊனமிதைக்
  • 344. கண்டால் நமதாசை கைவிடுவார் என்றதனைத்
    தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே - அண்டாது
  • 345. போதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால்
    மாதவிடாய் உண்டால் மதித்திலையே - மாதரவர்
  • 346. தங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி
    வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே - நன்கிலவாய்
  • 347. ஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே
    வாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே - சேந்தவடி
  • 348. தண்டா மரையென்றாய் தன்மை விளர்ப்படைந்தால்
    வெண்டா மரையென்று மேவுதியோ - வண்டாரா
  • 349. மேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால்
    தீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ - வானாட்டும்
  • 350. மின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ
    தொன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண்107 - ஒன்றாச்சொல்
  • 351. வேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ
    தாள்வா கனமென்றால் ஆகாதோ - வேளானோன்
  • 352. காகளமாய்108 இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன்
    காகளமென் பார்க்கென் கழறுதியே - நாகளவும்
  • 353. சாயைமயில் என்றே தருக்குகின்றாய் சார்பிரம
    சாயை109யஃ தென்பார்க்கென் சாற்றுதியே - சேயமலர்
  • 354. அன்ன நடைஎன்பாய் அஃதன் றருந்துகின்ற
    அன்னநடை என்பார்க்கென் ஆற்றுதியே - அன்னவரை
  • 355. ஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத்
    தீரா யிரநாடி யாண்டுடைத்தே - பாரார்ந்த
  • 356. முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்
    துன்னு முரோமத் துவாரமுண்டே - இன்னமுதால்
  • 357. செய்தவடி வென்பாயச் செய்கைமெய்யேல் நீயவர்கள்
    வைதிடினும் மற்றதனை வையாயே - பொய்தவிராய்
  • 358. ஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது
    கிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே - கொள்ளுமவர்
  • 359. ஈடில்பெயர் நல்லார் எனநயந்தாய் நாய்ப்பெயர்தான்
    கேடில்பெருஞ் சூரனென்பர் கேட்டிலையோ - நாடிலவர்
  • 360. மெல்லியலார் என்பாய் மிகுகருப்ப வேதனையை
    வல்லியலார் யார்பொறுக்க வல்லார்காண் - வில்லியல்பூண்
  • 361. வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய் வெந்தீயில்
    பாய்ந்தாலும் அங்கோர் பலனுண்டே - வேய்ந்தாங்கு
  • 362. சென்றால் அவர்பின்னர்ச் செல்கின்றாய் வெம்புலிப்பின்
    சென்றாலும் அங்கோர் திறனுண்டே - சென்றாங்கு
  • 363. நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய் கண்மூடி
    நின்றாலும் அங்கோர் நிலையுண்டே - ஒன்றாது
  • 364. கண்டால் அவருடம்பைக் கட்டுகின்றாய்110கல்லணைத்துக்
    கொண்டாலும் அங்கோர் குணமுண்டே - பெண்டானார்
  • 365. வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத்தொண்டு
    செய்தாலும் அங்கோர் சிறப்புளதே - கைதாவி
  • 366. மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினைநீ
    செத்தாலும் அங்கோர் சிறப்புளதே - வைத்தாடும்
  • 367. மஞ்சள் மினுக்கால் மயங்கினைநீ மற்றொழிந்து
    துஞ்சுகினும் அங்கோர் சுகமுளதே - வஞ்சியரைப்
  • 368. பார்த்தாடி ஓடிப் படர்கின்றாய் வெந்நரகைப்
    பார்த்தாலும் அங்கோர் பலனுண்டே - சேர்த்தார்கைத்
  • 369. தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன்பூதம்
    தொட்டாலும் அங்கோர் துணையுண்டே - நட்டாலும்
  • 370. தெவ்வின்மட வாரைத் திளைக்கின்றாய் தீவிடத்தை
    வவ்வுகினும் அங்கோர் மதியுண்டே - செவ்விதழ்நீர்
  • 371. உண்டால் மகிழ்வாய்நீ ஒண்சிறுவர் தம்சிறுநீர்
    உண்டாலும் அங்கோ ருரனுண்டே - கண்டாகக்
  • 372. கவ்வுகின்றாய் அவ்விதழைக் கார்மதுகம் வேம்பிவற்றைக்
    கவ்வுகினும் அங்கோர் கதியுண்டே - அவ்விளையர்
  • 373. மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்
    மென்றாலும் அங்கோர் விளைவுண்டே - முன்றானை
  • 374. பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்கவம்பு
    பட்டாலும் அங்கோர் பலனுண்டே - கிட்டாமெய்த்
  • 375. தீண்டிடிலுள் ளோங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள்முன்
    தீண்டிடினும் அங்கோர் திறனுண்டே - வேண்டியவர்
  • 376. வாய்க்கிடயா தானுமொன்று வாங்குகின்றாய் மற்றதையோர்
    நாய்க்கிடினும் அங்கோர் நலனுண்டே - தாக்கவர்க்காய்த்
  • 377. தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்
    போட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக்
  • 378. கொண்டா ருடனுணவு கொள்கின்றாய் குக்கலுடன்
    உண்டாலும் அங்கோர் உறவுண்டே - மிண்டாகும்
  • 379. இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை
    நுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே111 - மங்கையர்தம்
  • 380. ஏத்தா மனைகாத் திருக்கின்றாய் ஈமமது
    காத்தாலும் அங்கோர் கனமுண்டே - பூத்தாழ்வோர்
  • 381. காட்டாக் குரல்கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்
    கேட்டாலும் அங்கோர் கிளருண்டே - கோட்டாவி
  • 382. ஆழ்ந்தா ருடன்வாழ ஆதரித்தாய் ஆழ்ங்கடலில்
    வீழ்ந்தாலும் அங்கோர் விரகுண்டே - வீழ்ந்தாருள்
  • 383. வீட்டால் முலையுமெதிர் வீட்டால் முகமுமுறக்
    காட்டாநின் றார்கண்டும் காய்ந்திலையே - கூட்டாட்குச்
  • 384. செய்கை யிடும்படிதன் சீமான் தனதுபணப்
    பைகையிடல் கண்டும் பயந்திலையே - சைகையது
  • 385. கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும்
    செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே - எய்யாமல்
  • 386. ஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்
    கூறுவனேல் அம்ம குடர்குழம்பும் - கூறுமிவர்
  • 387. வாயொருபால் பேச மனமொருபால் செல்லவுடல்
    ஆயொருபால் செய்ய அழிவார்காண் - ஆயஇவர்
  • 388. நன்றறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்
    சென்றறியார் பேய்க்கே சிறப்பெடுப்பார் - இன்றிவரை
  • 389. வஞ்சமென்கோ வெவ்வினையாம் வல்லியமென் கோபவத்தின்
    புஞ்சமென்கோ மாநரக பூமியென்கோ - அஞ்சுறுமீர்
  • 390. வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு
    நாளென்கோ வெய்ய நமனென்கோ - கோளென்கோ
  • 391. சாலமென்கோ வானிந்த்ர சாலமென்கோ வீறால
    காலமென்கோ நின்பொல்லாக் காலமென்கோ - ஞாலமதில்
  • 392. பெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்
    மண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண்என்றால்
  • 393. பேயும் இரங்குமென்பார் பேய்ஒன்றோ தாம்பயந்த
    சேயும் இரங்குமவர் தீமைக்கே - ஆயுஞ்செம்
  • 394. பொன்னால் துகிலால் புனையா விடிலவர்மெய்
    என்னாகும் மற்றிதைநீ எண்ணிலையே - இன்னாமைக்
  • 395. கொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும்
    வித்தென் றறிந்துமதை விட்டிலையே - தொத்தென்று
  • 396. பாச வினைக்குட் படுத்துறும்அப் பாவையர்மேல்
    ஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே - நேசமிலாய்
  • 397. நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே
    பொன்னாசை மேன்மேலும் பொங்கினையே - பொன்னாசை
  • 398. வைத்திழந்து வீணே வயிறெரிந்து மண்ணுலகில்
    எத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார் - தத்துகின்ற
  • 399. பொன்னுடையார் துன்பப் புணரியொன்றே அல்லதுமற்
    றென்னுடையார் கண்டிங் கிருந்தனையே - பொன்னிருந்தால்
  • 400. ஆற்றன்மிகு தாயுமறி யாவகையால் வைத்திடவோர்
    ஏற்றவிடம் வேண்டுமதற் கென்செய்வாய் - ஏற்றவிடம்
  • 401. வாய்த்தாலும் அங்கதனை வைத்தவிடம் காட்டாமல்
    ஏய்த்தால் சிவசிவமற் றென்செய்வாய் - ஏய்க்காது
  • 402. நின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான
    தென்றால் அரகரமற் றென்செய்வாய் - நன்றாக
  • 403. ஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை
    என்றும் புரப்பதனுக் கென்செய்வாய் - வென்றியொடு
  • 404. பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்
    ஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் - பேர்த்தெடுக்கக்
  • 405. கைபுகுத்தும் காலுட் கருங்குளவி செங்குளவி
    எய்புகுத்தக் கொட்டிடின்மற் றென்செய்வாய் - பொய்புகுத்தும்
  • 406. பொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித்
    தென்காவல் என்றால்மற் றென்செய்வாய் - பொன்காவல்
  • 407. வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்
    ஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர்
  • 408. உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன்
    இன்னே வருவனதற் கென்செய்வாய் - முன்னேதும்
  • 409. இல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம்
    எல்லாம் அழியுமதற் கென்செய்வாய் - நில்லாமல்
  • 410. ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது
    பாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே - ஆய்ந்தோர்சொல்
  • 411. கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற
    சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே112- பேர்த்தோடும்
  • 412. நாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா
    ஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே - கீழ்க்கொல்லைப்
  • 413. பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்
    இச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே - இச்சையிலார்
  • 414. இட்டமலம் பட்டவிடம் எல்லாம்பொன் னாம்என்றால்
    இட்டமதை விட்டற்113 கிசைந்திலையே - முட்டகற்றப்
  • 415. பொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய்
    என்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே - இந்நிலத்தில்
  • 416. நீண்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்
    வீண்மயக்கம் என்றதனை விட்டிலையே -நீண்வலயத்
  • 417. திச்செல்வ மின்றி இயலாதேல் சிற்றுயிர்கள்
    எச்செல்வம் கொண்டிங் கிருந்தனவே - வெச்சென்ற
  • 418. மண்ணாசை கொண்டனைநீ மண்ணாளும் மன்னரெலாம்
    மண்ணால் அழிதல் மதித்திலையே - எண்ணாது
  • 419. மண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தவுடல் வைக்கவயல்
    மண்கொண்டார் தம்மிருப்பில் வைத்திலரே - திண்கொண்ட
  • 420. விண்ணேகுங் காலங்கு வேண்டுமென ஈண்டுபிடி
    மண்ணேனுங் கொண்டேக வல்லாரோ - மண்நேயம்
  • 421. என்னதென்றான் முன்னொருவன் என்னதென்றான் பின்னொருவன்
    இன்னதுநீ கேட்டிங் கிருந்திலையோ - மன்னுலகில்
  • 422. கண்காணி யாய்நீயே காணியல்லாய் நீயிருந்த
    மண்காணி என்று மதித்தனையே - கண்காண
  • 423. மண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீமேலை
    விண்காணி வேண்டல் வியப்பன்றே - எண்காண
  • 424. அந்தரத்தில் நின்றாய்நீ அந்தோ நினைவிடமண்
    அந்தரத்தில் நின்ற தறிந்திலையே - தந்திரத்தில்
  • 425. மண்கொடுப்பேன் என்றுரைக்கில் வைவார் சிறுவர்களும்
    மண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே - வண்கொடுக்கும்
  • 426. வீடென்றேன் மற்றதைமண் வீடென்றே நீநினைந்தாய்
    வீடென்ற சொற்பொருளை விண்டிலையே - நாடொன்றும்
  • 427. மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடனைத்தும்
    கண்ணாரக் கட்டழிதல் கண்டிலையோ - மண்ணான
  • 428. மேல்வீடும் அங்குடைய வேந்தர்களும் மேல்வீட்டப்
    பால்வீடும் பாழாதல் பார்த்திலையோ - மேல்வீட்டில்
  • 429. ஏறுவனே என்பாய் இயமன் கடாமிசைவந்
    தேறுவனேல் உன்னாசை என்னாமோ - கூறிடும்இம்
  • 430. மண்ணளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்
    எண்ணமுனக் கெவ்வா றிருந்ததுவே - மண்ணிடத்தில்
  • 431. ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் - என்னிலுன்றன்
    ஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் - போகாத
  • 432. பாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்
    கோபக் கடலில் குளித்தனையே - தாபமுறச்
  • 433. செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
    இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே114 - மல்லல்பெறத்
  • 434. தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்
    பொன்னைப்போல்போற்றிப் புகழ்ந்திலையே115 - துன்னி
  • 435. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந்
    திகழ்வாய் மையும்நீ தெளியாய்116 - இகழ்வாரை
  • 436. எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்
    றிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே - தெவ்வென்ன
  • 437. ஓரா வெகுளி யுடையான் தவமடையான்
    தீராயென் பாரதுவும் தேர்ந்திலையே - பேராநின்
  • 438. வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்
    இவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய்
  • 439. ஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய்தவரைக்
    காய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே - வாய்ந்தறிவோர்
  • 440. எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற
    கொல்லா நலம்சிறிதுங் கொண்டிலையே - பொல்லாத
  • 441. வன்போ டிருக்கு மதியிலிநீ மன்னுயிர்க்கண்
    அன்போ டிரக்கம் அடைந்திலையே - இன்போங்கு
  • 442. தூய்மையென்ப தெல்லாம் துணையாய் அணைவதுதான்
    வாய்மையென்ப தொன்றே மதித்திலையே - தூய்மையிலாய்
  • 443. மானொருகை ஏந்திநின்ற வள்ளலன்பர் தங்களுளே
    நானொருவன் என்று நடித்தனையே - ஆனமற்றைப்
  • 444. பாதகங்க ளெல்லாம் பழகிப் பழகியதில்
    சாதகஞ்செய் வோரில் தலைநின்றாய் - பாதகத்தில்
  • 445. ஓயா விகார உணர்ச்சியினால் இவ்வுலக
    மாயா விகாரம் மகிழ்ந்தனையே - சாயாது
  • 446. நீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற
    தாயிளமை எத்தனைநாள் தங்கியதே - ஆயிளமை
  • 447. மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார்
    கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ - மெய்கொடுத்த
  • 448. கூனொடும்கைக் கோலூன்றிக் குந்தி நடைதளர்ந்து
    கானடுங்க நிற்பவரைக் கண்டிலையோ - ஊனொடுங்க
  • 449. ஐயநட வென்றே அரும்புதல்வர் முன்செலப்பின்
    பைய நடப்பவரைப் பார்த்திலையோ - வெய்யநமன்
  • 450. நாடழைக்கச் சேனநரி நாயழைக்க நாறுசுடு
    காடழைக்க மூத்துநின்றார் கண்டிலையோ - பீடடைந்த
  • 451. மெய்யுலர்ந்து நீரின் விழியுலர்ந்து வாயுலர்ந்து
    கையுலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ - மெய்யுலர்ந்தும்
  • 452. சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ
    ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ - ஆகாத
  • 453. கண்டமிது பொல்லாக் கடுநோய் எனுங்குமர
    கண்டமிஃ தென்பவரைக் கண்டிலையோ - கொண்டவுடல்
  • 454. குட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத
    குட்டமென நோவார் குறித்திலையோ - துட்டவினை
  • 455. மாலையினும் காலையினும் மத்தியினும் குத்துமிது
    சூலையென நோவாரைச் சூழ்ந்திலையோ - சாலவுமித்
  • 456. தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்
    மேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச்
  • 457. சித்தநோய் செய்கின்ற சீதநோய் வாதமொடு
    பித்தநோய் கொண்டவர்பால் பேர்ந்திலையோ - மெத்தரிய
  • 458. கைப்பிணியும் காற்பிணியும் கட்பிணியோ டெண்ணரிய
    மெய்ப்பிணியும் கொண்டவரை விண்டிலையோ - எய்ப்புடைய
  • 459. முட்டூறும் கைகால் முடங்கூன் முதலாய
    எட்டூறுங் கொண்டவரை எண்ணிலையோ - தட்டூறிங்
  • 460. கெண்ணற்ற துண்டேல் இளமை ஒருபொருளாய்
    எண்ணப் படுமோவென் றெண்ணிலையோ - எண்ணத்தில்
  • 461. பொய்யென் றறவோர் புலம்புறவும் இவ்வுடம்பை
    மெய்யென்று பொய்ம்மயக்கம் மேவினையே - கைநின்று
  • 462. கூகா எனமடவார் கூடி அழல்கண்டும்
    நீகாதல் வைத்து நிகழ்ந்தனையே - மாகாதல்
  • 463. பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்
    கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த
  • 464. ஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு
    நீராடல் சற்றும் நினைந்திலையே - சீராக
  • 465. இன்றிருந்தார் நாளைக் கிருப்பதுபொய் என்றறவோர்
    நன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே - ஒன்றி
  • 466. உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை
    மறங்கருதி அந்தோ மறந்தாய்117 - கறங்கின்
  • 467. நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்
    மருவும் குறட்பா மறந்தாய்118 - தெருவில்
  • 468. இறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல்
    மறந்தாய் மறந்தாய் மறந்தாய் - இறந்தார்
  • 469. பறையோசை அண்டம் படீரென் றொலிக்க
    மறையோசை யன்றே மறந்தாய் - இறையோன்
  • 470. புலனைந்தும்என்றருளும் பொன்மொழியை மாயா
    மலமொன்றி அந்தோ மறந்தாய்119 - நிலனொன்றி
  • 471. விக்குள் எழநீர் விடுமி னெனஅயலோர்
    நெக்குருகல் அந்தோ நினைந்திலையே - மிக்கனலில்
  • 472. நெய்விடல்போல் உற்றவர்கண்ணீர்விட் டழவுயிர்பல்
    மெய்விடலும் கண்டனைநீ விண்டிலையே - செய்வினையின்
  • 473. வாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய
    நாள்கழிதற் கந்தோ நடுங்கிலையே - கோள்கழியும்
  • 474. நாழிகையோர் நாளாக நாடினையே நாளைஒரு
    நாழிகையாய் எண்ணி நலிந்திலையே - நாழிகைமுன்
  • 475. நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்
    சென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - பின்றாது
  • 476. தொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர்
    விட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே - தட்டாமல்
  • 477. உண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம்
    கொண்டார் எனக்கேட்டும் கூசிலையே - வண்தாரார்
  • 478. நேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று
    சாற்றுவது கேட்டும் தணந்திலையே - வீற்றுறுதேர்
  • 479. ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்
    சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு
  • 480. என்னே இருந்தார் இருமினார் ஈண்டிறந்தார்
    அன்னே எனக்கேட்டும் ஆய்ந்திலையே - கொன்னே
  • 481. மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்
    கருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் - கருவொன்
  • 482. றொடுதிங்கள் ஐயைந்தில்120 ஒவ்வொன்றில் அந்தோ
    கெடுகின்ற தென்றதுவும் கேட்டாய் - படுமிந்
  • 483. நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்
    பலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் - பலனுற்றே
  • 484. காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்
    கோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப்
  • 485. பாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே
    காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ - மேலுவந்து
  • 486. பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்
    அற்றாவி போவ தறிந்திலையோ - கற்றாயப்
  • 487. பள்ளியிடுங் காலவனைப் பார நமன்வாயில்
    அள்ளியிடுந் தீமை அறிந்திலையோ - பள்ளிவிடும்
  • 488. காளைப் பருவமதில் கண்டார் இரங்கிடஅவ்
    ஆளைச் சமன்கொள்வ தாய்ந்திலையோ - வேளைமண
  • 489. மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே
    சாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே - மேற்பிள்ளை
  • 490. மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்
    பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ - வீடலிஃ
  • 491. திக்கணமோ மேல்வந் திடுங்கணமோ அன்றிமற்றை
    எக்கணமோ என்றார்நீ எண்ணிலையே - தொக்குறுதோல்
  • 492. கூடென்கோ இவ்வுடம்பைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட
    ஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ - காடென்கோ
  • 493. பாழென்கோ ஒன்பதுவாய்ப் பாவையென்கோ வன்பிறவி
    ஏழென்கோ கன்மமதற் கீடென்கோ - தாழ்மண்ணின்
  • 494. பாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும
    காண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ - கோண்தகையார்
  • 495. மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ
    பொய்யென்கோ மாயப் பொடியென்கோ - மெய்யென்ற
  • 496. மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித் தனருலகர்
    அங்கவற்றை எண்ணா தலைந்தனையே - தங்குலகில்
  • 497. மற்றிதனை ஓம்பி வளர்க்க உழன்றனைநீ
    கற்றதனை எங்கே கவிழ்த்தனையே - அற்றவரை
  • 498. இக்கட் டவிழ்த்திங் கெரிமூட் டெனக்கேட்டும்
    முக்கட்டும் தேட முயன்றனையே - இக்கட்டு
  • 499. மண்பட்டு வெந்தீ மரம்பட் டிடக்கண்டும்
    வெண்பட் டுடுக்க விரைந்தனையே - பண்ப ட்ட
  • 500. ஐயா அரைநாண் அவிழுமெனக் கேட்டுநின்றும்
    மெய்யா பரணத்தின் மேவினையே - எய்யாமல்
  • 501. காதிற் கடுக்கன் கழற்றுமெனக் கேட்டுநின்றும்
    ஏதிற் பணியினிடத் தெய்தினையே - தாதிற்குத்
  • 502. துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்
    நற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற
  • 503. வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்
    இன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே - முன்சுவைத்துப்
  • 504. பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்
    சோறுண் டிருக்கத் துணிந்தனையே - மாறுண்டு
  • 505. கூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்டுமிகு
    சோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே - ஆம்பலனோர்
  • 506. நல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத
    இல்வாழ்வை மெய்யென் றிருந்தனையே - சொல்லாவி
  • 507. ஈன்றோன் தனைநாளும் எண்ணாமல் இவ்வுடம்பை
    ஈன்றோரை ஈன்றோரென் றெண்ணினையே - ஈன்றோர்கள்
  • 508. நொந்தால் உடனின்று நோவார் வினைப்பகைதான்
    வந்தால் அதுநீக்க வல்லாரோ - வந்தாடல்
  • 509. உற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ்
    மற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ - சிற்றுணவை
  • 510. ஈங்கென்றால் வாங்கி யிடுவார் அருளமுதம்
    வாங்கென்றால் வாங்கியிட வல்லாரோ - தீங்ககற்றத்
  • 511. தூண்டா மனையாதிச் சுற்றமெலாம் சுற்றியிட
    நீண்டாய் அவர்நன் னெறித்துணையோ - மாண்டார்பின்
  • 512. கூடி அழத்துணையாய்க் கூடுவார் வன்னரகில்
    வாடியழும் போது வருவாரோ - நீடியநீ
  • 513. இச்சீவர் தன்துணையோ ஈங்கிவர்கள் நின்துணையோ
    சீச்சீ இதென்ன திறங்கண்டாய் - இச்சீவர்
  • 514. நின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன்
    இந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர் - நின்னியல்பின்
  • 515. எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்
    வெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும்
  • 516. அவ்வவ் விடங்கடொறும் அவ்வவரை ஆண்டாண்டிங்
    கெவ்வெவ் விதத்தால் இழந்தனையோ - அவ்விதத்தில்
  • 517. ஒன்றேனும் நன்றாய் உணர்ந்திருத்தி யேலிவரை
    இன்றே துறத்தற் கிசையாயோ - நின்றோரில்
  • 518. தாயார் மனையார் தனயரார் தம்மவரார்
    நீயார் இதனை நினைந்திலையே - சேயேகில்
  • 519. ஏங்குவரே என்றாய் இயமன்வரின் நின்னுயிரை
    வாங்கிமுடி யிட்டகத்தில் வைப்பாரோ - நீங்கியிவண்
  • 520. உன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ
    என்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே - சென்றுபின்னின்
  • 521. தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில்
    என்மனையாள் என்பதுநீ எவ்வணமே - நன்மைபெறும்
  • 522. நட்பமைந்த நன்னெறிநீ நாடா வகைதடுக்கும்
    உட்பகைவர் என்றிவரை ஓர்ந்திலையே - நட்புடையாய்
  • 523. எம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குட் சில்லுயிர்பால்
    இம்மால் அடைந்ததுநீ என்னினைந்தோ - வம்மாறில்
  • 524. எம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர்
    தம்பந்தம் எவ்வாறு தங்கியதே - சம்பந்தர்
  • 525. அற்றவருக் கற்றசிவனாமெனுமப் பொன்மொழியை
    மற்றைமொழி போன்று மறந்தனையே - சிற்றுயிர்க்குக்
  • 526. கற்பனையில் காய்ப்புளதாய்க் காட்டும் பிரபஞ்சக்
    கற்பனையை மெய்யென்று கண்டனையே - பற்பலவாம்
  • 527. தூரியத்தில்122 தோன்றொலிபோல் தோன்றிக் கெடுமாயா
    காரியத்தை மெய்யெனநீ கண்டனையே - சீரியற்றும்
  • 528. ஆடகத்தில் பித்தளையை ஆலித் திடுங்கபட
    நாடகத்தை மெய்யென்று நம்பினையே - நீடகத்தில்
  • 529. காயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த
    மாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே - வாயவித்தை
  • 530. இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு
    முப்படகத் துள்ளே முயங்கினையே - ஒப்பிறைவன்
  • 531. ஆனவொளி யிற்பரையாம் ஆதபத்தி னால்தோன்றும்
    கானலினை நீராய்க் களித்தனையே - ஆனகிரி
  • 532. யாசத்தி யென்றிடுமோர் அம்மைவிளை யாட்டெனுமிப்
    பாசத்தி னுள்ளே படர்ந்தனையே - நேசத்தின்
  • 533. பொய்யொன்றுண் மெய்யிற் புகும்பால லீலைதனை
    மெய்யென்று வீணில் விரிந்தனையே - பொய்யென்று
  • 534. மீட்டுநின்ற லீலா வினோத மெனுங்கதையைக்
    கேட்டுநின்றும் அந்தோ கிளர்ந்தனையே - ஈட்டிநின்ற
  • 535. காலத்தை வீணில் கழிக்கும் படிமேக
    சாலத்தை மெய்யாய்த் தருக்கினையே - சாலத்தில்
  • 536. கண்மையகன் றோங்குமந்த காரத்தில் செம்மாப்புற்
    றுண்மையொன்றுங் காணா துழன்றனையே - வண்மையிலாய்
  • 537. இங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்
    கங்கு லினைப்பகலாய்க் கண்டனையே - தங்குறுமித்
  • 538. தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ
    மோகாதிக் குள்ளே முயல்கின்றாய் - ஓகோநும்
  • 539. கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்
    பூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும்
  • 540. வாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும்
    வீழ்வுகொடு123 வாளா விழுகின்றாய் - தாழ்வுறநும்
  • 541. விண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய்
    உண்டுறங்கு கின்றோரை ஒத்தனையே - தொண்டுலகங்
  • 542. கானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்
    நீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் - ஆனநும்மூர்
  • 543. வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை
    கொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு
  • 544. கண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ
    கொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் - உண்டழிக்க
  • 545. ஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்
    ஊழிநன்னீ124ரோவென்பார் ஒத்தனையே - ஏழியற்றும்
  • 546. தற்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற
    சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே - பற்பகலும்
  • 547. உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய்
    கண்டனவே கண்டு களிக்கின்றாய் - கொண்டனவே
  • 548. கொண்டியங்கு கின்றாய் குறித்தனவே பிற்குறித்துப்
    பண்டறியார் போலப் படர்கின்றாய் - பண்டறிந்து
  • 549. சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்றிதனை
    நல்லோர்கள் கண்டால் நகையாரோ - செல்லான
  • 550. காலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்
    காலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் - சாலவுமுன்
  • 551. போதுசெலா முன்னமனு பூதியைநீ நாடாமல்
    யாதுபயன் எண்ணி இனைகின்றாய் - தீதுசெயும்
  • 552. வீணவத்தை யெல்லாம் விளைக்கும் திறல்மூல
    ஆணவத்தி னாலே அழிந்தனையே - ஆணவத்தில்
  • 553. நீயார் எனஅறியாய் நின்னெதிரில் நின்றவரை
    நீயார் எனவினவி நீண்டனையே - ஓயாமல்
  • 554. ஊனின்ற ஒன்றின் உளவறியாய் அந்தோநீ
    நானென்று சொல்லி நலிந்தனையே - நானென்று
  • 555. சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ
    அல்லலுறுங் காலத் தறைகண்டாய் - அல்லவெலாம்
  • 556. நீஇங்கே நான்அங்கே நிற்கநடு வேகுதித்தால்
    நீஎங்கே நான்எங்கே நின்றறிகாண் - நீஇங்கு
  • 557. ஒன்றெடுக்கச் சென்றுமற்றை ஒன்றெடுக்கக் காண்கின்றேன்
    இன்றடுத்த நீஎங் கிருந்தனையே - மன்றடுத்த
  • 558. தாளா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது
    வாளா மதத்தின் மலிகின்றாய் - கேளாயிச்
  • 559. சார்பிலொன்று விட்டொழிந்தால் சாலமகிழ் கிற்பேனான்
    சோர்புகொண்டு நீதான் துயர்கின்றாய் - சார்புபெருந்
  • 560. தூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும்
    வாவென் றெனையும் வலிக்கின்றாய் - ஓவுன்றன்
  • 561. சூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம்
    சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் - நீட்சியில்நீ
  • 562. காலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன்
    மாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ - வாலுமண்டக்
  • 563. கூவத்தில் யானோர் குடநீ கயிற்றோடும்
    ஏவல்கொ ளுமேழை என்கேனோ - பாவத்தில்
  • 564. சுற்றுண்ட நீகடலில் தோன்றுசுழி யாகஅதில்
    எற்றுண்ட நான்திரணம் என்கேனோ - பற்றிடுநீ
  • 565. சங்கற்ப மாஞ்சூறை தானாக நானாடும்
    அங்கட் சருகென் றறைகேனோ - பொங்குற்ற
  • 566. சேலைவிரா யோர்தறியில் செல்குழைநீ பின்தொடரும்
    நூலிழைநான் என்று நுவல்கேனோ - மாலிடுநீ
  • 567. துள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின்
    உள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ - எள்ளுறுநீ
  • 568. பாழலைவா னேகும் பருந்தாக அப்பருந்தின்
    நீழலைநான் என்று நினைகேனோ - நீழலுறா
  • 569. நின்வசம்நான் என்றுலகு நிந்தைமொழி கின்றதலால்
    என்வசம்நீ என்ப திலைகண்டாய் - என்வசம்நீ
  • 570. ஆனால் எளியேனுக் காகாப் பொருளுளவோ
    வானாடர் வந்து வணங்காரோ - ஆனாமல்12
  • 571. எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்
    கண்ணுதலும் அங்கைக் கனியன்றோ - எண்ணுமிடத்
  • 572. தென்செய்வே னோர்கணமும் என்சொல்வழி நில்லாமல்
    கொன்செய்வேன் என்று குதிக்கின்றாய் - வன்செய்யும்
  • 573. சிந்தோடும்126 ஓர்வடவைத் தீயும் கரத்தடைப்பர்
    அந்தோ உனையார் அடக்குவரே - வந்தோடும்
  • 574. கச்சோதம்127 என்னக் கதிரோன் தனையெடுப்பர்
    அச்சோ உனையார் அடக்குவரே - வைச்சோங்கு
  • 575. மூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்
    ஆவுனையும் இங்கார் அடக்குவரே - மேவுபல
  • 576. தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்
    வாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் - மாசுடைய
  • 577. போகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா
    யோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் - மேகமென்றும்
  • 578. வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்
    ஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற
  • 579. சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக
    நீதியென்றும் கன்ம நெறியென்றும் - ஓதரிய
  • 580. அண்டமென்றும் அண்டத் தசைவும் அசைவுமலாப்
    பண்டமென்றும் சொல்பவெலாம் பன்முகங்கள் - கொண்டிருந்த
  • 581. உன்நினைவி னுள்ளே உதித்திட் டுலவிநிற்ப
    எந்நினைவு கொண்டோமற் றிவ்வுலகர் - எந்நவையும்
  • 582. தந்தோன் எவனோ சதுமுகனுண் டென்பார்கள்
    அந்தோநின் செய்கை அறியாரே - அந்தோநான்
  • 583. ஆமென்றால் மற்றதனை அல்லவென்பாய் அல்லவென்றால்
    ஆமென்பாய் என்னை அலைக்கின்றாய் - நாம்அன்பாய்
  • 584. என்றும் பிறந்திறவா இன்பம் அடைதுமென்றால்
    நன்றென் றொருப்படுவாய் நண்ணுங்கால் - தொன்றெனவே12
  • 585. செல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமையெலாம்
    நல்கிற்பாய் என்னேநின் நட்புடைமை - சொல்கிற்பில்
  • 586. ஆவதுவும் நின்னால் அழிவதுவும்நின் னாலெனயான்
    நோவதுவும் கண்டயலில் நோக்கினையே - தாவுமெனக்
  • 587. காணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்
    ஊணவலம் உற்றாரோ டூரவலம் - பூணவலம்
  • 588. ஊன்அவலம் அன்றியும்என் உற்றதுணை யாம்நீயும்
    தான்அவலம் என்றாலென் சாற்றுவதே - நான்இவணம்
  • 589. இன்பமெது கண்டேமால் இச்சையெலாம் துன்பமதில்
    துன்பம் பிறப்பென்றே சோர்கின்றேன் - வன்புடைய
  • 590. இப்பிறவித் துன்பத்தி னும்திதியில் துன்பமது
    செப்பரிதாம் என்றே திகைக்கின்றேன் - செப்பிறப்பின்
  • 591. ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்
    வாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம்
  • 592. செய்வதென்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம்நான்
    நைவதெல்லாம் கண்டு நடந்தனையே - கைவருமிவ்
  • 593. இல்லிக் குடமுடைந்தால் யாதாமென் றுன்னுடன்யான்
    சொல்லித் திரிந்துமெனைச் சூழ்ந்திலையே - வல்இயமன்
  • 594. நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களிலெவ்
    வேளையோ தூது விடில்அவர்கள் - கேளையோ
  • 595. நல்லோம் எனினும் நடவார் நடவார்நாம்
    செல்லோம் எனினுமது செல்லாதே - வல்லீர்யாம்
  • 596. இன்சொலினோம் இன்றிங் கிருந்துவரு வோம்எனயாம்
    என்சொலினும் அச்சொலெலாம் ஏலாதே - மன்சொலுடைத்
  • 597. தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று
    நாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம்
  • 598. அந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும்
    நன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் - என்னாநின்
  • 599. றோதுகின்றேன் கேட்டும் உறார்போன் றுலகியலில்
    போதுகின்றாய் யாது புரிகிற்பேன் - தீதுநன்றோ
  • 600. டேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா
    நேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே - சாற்றுமந்த
  • 601. தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்
    தாமதமே மோக சமுத்திரம்காண் - தாமதமென்
  • 602. றையோ ஒருநீ அதனோடு கூடினையால்
    பொய்யோநாம் என்று புகன்றதுவே - கையாமல்
  • 603. ஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால்
    என்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ - பன்னுறுநின்
  • 604. தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்
    போதெல்லாம் சொல்லிடினும் போதாதே - ஆதலினால்
  • 605. வைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம்
    செய்கின்றாய் ஈதோர் திறமன்றே - உய்கிற்பான்
  • 606. வாடுகின்றேன் நின்னை மதித்தொருநான் நீமலத்தை
    நாடுகின்றாய் ஈதோர் நலமன்றே - கூடுகின்ற
  • 607. ஈண்டோர் அணுவாய் இருந்தநீ எண்டிசைபோல்
    நீண்டாய் இஃதோர் நெறியன்றே - வேண்டாநீ
  • 608. மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை
    முற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம்
  • 609. தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு
    மானடங்கொள் பாத மலர்வாய்க்கும் - வானடங்க
  • 610. எல்லா நலமும் இதனால் எனமறைகள்
    எல்லாம் நின்சீரே எடுத்தியம்பும் - எல்லார்க்கும்
  • 611. மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்
    றாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் - ஆகுமிந்த
  • 612. நன்மை பெறுமேன்மை நண்ணியநீ நின்னுடைய
    தன்மைவிடல் அந்தோ சதுரலஇப் - புன்மையெலாம்
  • 613. விட்டொழித்து நான்மொழியும் மெய்ச்சுகத்தை நண்ணுதிநீ
    இட்டிழைத்த அச்சுகந்தான் யாதென்னில் - கட்டழித்த
  • 614. வேடம் சுகமென்றும் மெய்யுணர்வை யின்றிநின்ற
    மூடம் சுகமென்றும் முன்பலவாம் - தோடம்செய்
  • 615. போகம் சுகமென்றும் போகம் தரும்கரும
    யோகம் சுகமென்றும் உண்டிலையென் - றாகஞ்செய்
  • 616. போதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து
    நாதம் சுகமென்றும் நாம்பொருளென் - றோதலஃ
  • 617. தொன்றே சுகமென்றும் உட்கண் டிருக்குமந்த
    நன்றே சுகமென்றும் நாம்புறத்தில் - சென்றேகண்
  • 618. டாற்றல் சுகமென்றும் அன்பறியாச் சூனியமே
    ஏற்ற சுகமென்றும் இவ்வண்ணம் - ஏற்றபடி
  • 619. வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே
    சொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று - சொல்லுகின்ற
  • 620. வானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற
    நானாதி மூன்றிலொன்று நாடாமல் - ஆனாமை
  • 621. எள்ளும் பகலும் இரவுமிலா ஓரிடத்தில்
    உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் - வள்ளலென
  • 622. வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்
    சூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக்
  • 623. கெவ்வா றிருந்தால் இயலும் எனிலம்ம
    இவ்வா றிருந்தால் இயலாதால் - செவ்வாற்றில்
  • 624. பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது
    பற்றற்றால் அன்றிப் பலியாதால் - பற்றற்றல்
  • 625. வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க
    வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனையும்
  • 626. ஈனமந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற
    ஞானம்வந்தால் அன்றி நலியாதால் - ஞானமது
  • 627. போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி
    வேகமுற்றால் அன்றி விளங்காதால் - ஆகவஃ
  • 628. துண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்
    எண்ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ணமது
  • 629. பங்கமடைந் தார்அவையைப் பாராது சாதுக்கள்
    சங்கமடைந் தாலன்றிச் சாராதால் - இங்கதனால்
  • 630. வீழ்முகத்த ராகிநிதம் வெண்­ றணிந்தறியாப்
    பாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் - பாழ்முகத்தில்
  • 631. பேயாட உள்ளறியாப் பித்தாட நின்னுடனே
    வாயாடு வோர்பால் மருவிநில்லேல் - நீயாடிப்
  • 632. பேதித் திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே
    வாதித் திடுவோர்பால் வாய்ந்துறையேல் - சாதித்துச்
  • 633. சைவமெங்கே வெண்­ற்றின் சார்பெங்கே மெய்யான
    தெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் - உய்வதெங்கே
  • 634. தீராச் சிவநிந்தை செய்துசிறு தேவர்களை
    நேராய்ப் பிதற்றுவர்பால் நேர்ந்துறையேல் - ஓராமல்
  • 635. எள்ளென்றும் தெய்வமென்ப தில்லை இதுதெளிந்து
    கொள்ளென்றும் துள்ளுகின்றோர் கூட்டமுறேல் - நள்ளொன்று
  • 636. நாமென்றும் நம்மையன்றி நண்ணும் பிரமமில்லை
    ஆமென்றும் சொல்பவர்பால் ஆர்ந்துறையேல் - தாமொன்ற
  • 637. எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்
    பொல்லா வலக்காரர் பொய்உகவேல் - புல்லாக
  • 638. அற்பமே மற்றவெலாம் ஆயிலழி129 யாக்காய
    கற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் - சிற்சிலவாம்
  • 639. சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா
    சத்திகளே வத்துவென்போர் சார்படையேல் - பொத்தியஇச்
  • 640. சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த
    கன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் - கன்மமிகு
  • 641. மாகம் கதியென்பார் மாட்டுறையேல் பல்போக
    யோகம் பொருளென்பா ரூடுறையேல் - ஏகம்கொள்
  • 642. மண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார்
    பெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் - மண்ணின்பால்
  • 643. மன்னுரையாச் சில்லோர் மரந்தெய்வம் என்பார்மற்
    றென்னுரையார் ஈண்டவர்பால் எய்தியிடேல் - மன்நலங்கள்
  • 644. பூத்தால் சிறுவர்களும் பூசா பலம்என்பார்
    தேற்றார் சிவபூசை செய்யாராய்ப் - பூத்தாவி
  • 645. வீறுகின்ற பூசையிலென் வீண்என்று வீண்பாழ்வாய்க்
    கூறுகின்ற பேயர்கள்பால் கூடியுறேல் - மாறுகின்ற
  • 646. நீட்கோல வாழ்க்கையெலாம் நீத்திடுவோன் பொன்அறைக்குத்
    தாட்கோல் இடுவாரைச் சார்ந்துறையேல் - நீட்கோல
  • 647. மெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப்
    பொய்யொழுக்கத் தார்பால் பொருந்தியுறேல் - பொய்யொழுக்கில்
  • 648. பொய்ந்நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்பால்
    அந்நூல் விரும்பி அடைந்தலையேல் - கைந்நேர்ந்து
  • 649. கோடாது கோடி கொடுத்தாலும் சைவநெறி
    நாடா தவரவையை நண்ணியிடேல் - கோடாது
  • 650. கொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு
    புல்லாக எண்ணிப் புறம்பொழிக - எல்லாமும்
  • 651. ஆகநவில் கின்றதென்நம் ஐயனுக்கன் பில்லாரை
    நீகனவி லேனும் நினையற்க - ஏகனடிக்
  • 652. கன்பே வடிவாய் அருளே உயிராய்ப்பே
    ரின்பே உணர்வாய் இசைந்தாரும் - அன்பாகிக்
  • 653. கண்டிகையே பூணிற் கலவையே வெண்­றாய்க்
    கொண்டிகவாச் சார்பு குறித்தாரும் - தொண்டுடனே
  • 654. வாய்மலரால் மாலை வகுத்தலொடு நம்மிறைக்குத்
    தூய்மலரால் மாலை தொடுப்பாரும் - சார்மலரோன்
  • 655. ஏர்நந்த னப்பணிகண் டிச்சையுற நம்மிறைக்குச்
    சீர்நந்த னப்பணிகள் செய்வோரும் - நார்நந்தாத்
  • 656. தீயின்மெழு காச்சிந்தை சேர்ந்துருகி நம்மிறைவாழ்
    கோயில்மெழு காநின்ற கொள்கையரும் - மேயினரைத்
  • 657. தாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான்
    கோயில் விளக்கும் குணத்தோரும் - தூயஅருள்
  • 658. இன்புடனே தீபமுதல் எல்லாச் சரியைகளும்
    அன்புடனே செய்தங் கமர்வாரும் - அன்புடனே
  • 659. அண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ
    புண்ணியமே நாளும் புரிவோரும் - புண்ணியமாம்
  • 660. தேனே அமுதே சிவமே சிவமேஎம்
    மானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான
  • 661. மன்னே அருட்கடலே மாணிக்க மேஎங்கள்
    அன்னேஎன் றுன்னி அமர்வோரும் - நன்னேயப்
  • 662. பண்­ர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்
    கண்­ர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்­ரில்
  • 663. பண்டுகண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்மேனி
    கண்டுகண்டு நாளும் களிப்போரும் - தொண்டடையும்
  • 664. பொற்பதிகம் என்றெண்ணிப் போற்றிஒரு மூவர்களின்
    சொற்பதிகம் கொண்டு துதிப்போரும் - சொற்பனத்தும்
  • 665. மாசகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்றதிரு
    வாசகத்தை வாயால் மலர்வோரும் - வாசகத்தின்
  • 666. மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு
    இன்னிசைப்பா ஆதி இசைப்போரும் - மன்னிசைப்பின்
  • 667. நல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்
    சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் - சொல்வாய்ந்த
  • 668. தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்
    வேதாக மங்கள் விரிப்போரும் - வேதாந்தம்
  • 669. சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று
    தேர்ந்தே சிவபூசை செய்வோரும் - ஆர்ந்தேத்தி
  • 670. நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து
    மன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் - முன்அயன்றன்
  • 671. அஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான்
    அஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் - அஞ்செனவே
  • 672. விஞ்சும் பொறியின் விடயமெலாம் நம்பெருமான்
    செஞ்சுந் தரப்பதத்தில் சேர்த்தோரும் - வஞ்சம்செய்
  • 673. பொய்வே தனைநீக்கும் புண்ணியன்பால் தம்முயிரை
    நைவே தனமாக்கும் நல்லோரும் - செய்வேலை
  • 674. நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்
    ஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத்
  • 675. தூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான்
    நேயம் நிகழ்த்தும் நெறியோரும் - மாயமுறு
  • 676. மானதுவாய் நின்ற வயம்நீக்கித் தானற்றுத்
    தானதுவாய் நிற்கும் தகையோரும் - வானமதில்
  • 677. வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்
    தானங்கண் டாடும் தவத்தோரும் - மோனமொடு
  • 678. தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்
    வாழ்சிவமும் கொண்டு வதிவோரும் - ஆழ்நிலைய
  • 679. வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத
    காரியங்க ளாதியெலாம் கண்டொழித்து - ஊர்இயங்கத்
  • 680. தஞ்சம் தருமலரோன் தத்துவமாம் பூதங்கள்
    ஐஞ்சும் பொறியஞ்சும் அஞ்சறிவும் - அஞ்செனுமோர்
  • 681. வாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம்
    ஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் - நீக்கிஅப்பால்
  • 682. மேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும்
    தாவி வயங்குசுத்த தத்துவத்தில் - மேவிஅகன்
  • 683. றப்பால் அருள்கண் டருளால் தமைத்தாம்கண்
    டப்பால் பரவெளிகண் டப்பாலுக் - கப்பாலும்
  • 684. தீராச் சுயமாய்ச் சிதானந்த மாம்ஒளியைப்
    பாரா இருந்த படியிருந்து - பேராது
  • 685. கண்டதுவென் றொன்றும் கலவாது தாம்கலந்து
    கொண்டசிவ யோகியராம் கொற்றவரும் - அண்டரிய
  • 686. சத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர
    தத்துவத்தின் நிற்கும் தகவோரும் - அத்துவத்தில்
  • 687. தீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த
    யாதும் சமமா இருப்போரும் - கோதுபடக்
  • 688. கூறும் குறியும் குணமும் குலமுமடி
    ஈறும் கடையும் இகந்தோரும் - வீறுகின்ற
  • 689. சேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த
    சாந்தி யுடனே சரிப்போரும் - சாந்திபெறத்
  • 690. தம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல்
    செம்மையுடன் வாழும் திறலோரும் - எம்மையினும்
  • 691. ஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின்
    நீராக நீந்தி நிலைத்தோரும் - சேராது
  • 692. தம்பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச்
    செம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் - மண்பொருள்போய்த்
  • 693. தாயர் எனமாதர் தம்மையெண்ணிப் பாலர்பித்தர்
    பேயரென நண்ணும் பெரியோரு - மீயதனின்
  • 694. எய்ப்பரிசாம் ஓர்திரணம் எவ்வுலகும் செய்தளிக்க
    மெய்ப்பரிசஞ் செய்யவல்ல வித்தகரும் - மெய்ப்படவே
  • 695. யாவும் அறிந்தும் அறியார்போன் றெப்பொழுதும்
    சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் - ஓவலின்றி
  • 696. வைதிடினும் வாழ்கஎன வாழ்த்தி உபசாரம்
    செய்திடினும் தன்மை திறம்பாரும் - மெய்வகையில்
  • 697. தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்
    ஏறா திழியா திருப்போரும் - மாறாது
  • 698. மோனந்தான் கொண்டு முடிந்தவிடத் தோங்குபர
    மானந்தா தீதத் தமர்ந்தோரும் - தாம்நந்தாச்
  • 699. சாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச்
    சாதுக்க ளன்றியெவர் தாமறிவார் - நீதுக்கம்
  • 700. நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந் தேத்திநிதம்
    ஆங்கவர்தாட் குற்றேவல் ஆய்ந்தியற்றி - ஓங்குசிவ
  • 701. பஞ்சாட் சரத்தைப் பகரருளே நாவாக
    எஞ்சாப் பரிவுடனே எண்ணியருள் - செஞ்சோதித்
  • 702. தாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை
    யாதொன்றும் நோக்கா தமைந்திடுக - தீதென்ற
  • 703. பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும்
    வாழ்வாய்என் னோடும் மகிழ்ந்து.

    • 84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.
    • 705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.
    • 86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.
    • 706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
    • 88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
    • 707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.
    • 90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
    • 708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
    • 92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
    • 709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
    • 94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
    • 710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
    • 96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
    • 711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
    • 98. நொறில் - விரைவு. தொ.வே.
    • 712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
    • 100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
    • 713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
    • 102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
    • 714 103. மேடு - வயிறு. தொ.வே.
    • 104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
    • 715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.
    • 106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
    • 716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.
    • 108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
    • 717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
    • 110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
    • 718 111. நொறில் - அடக்கம். தொ.வே.
    • 112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
    • 719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
    • 114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
    • 720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
    • 116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
    • 721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
    • 118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
    • 722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
    • 120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
    • 723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
    • 122. தூரியம் - பறை. தொ.வே.
    • 724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
    • 124. ஊழி - கடல். தொ.வே.
    • 725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
    • 126. சிந்து - கடல். தொ.வே.
    • 726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
    • 128. தொன்று - பழமை. தொ.வே.
    • 727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே

நெஞ்சறிவுறுத்தல் // நெஞ்சறிவுறுத்தல்