173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தைஇரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள்கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்).முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்றுதி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.
174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறைஅடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்குஎன் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம்.இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தாஎனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.
568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' -ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி.இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல்1930.குகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை .குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்றுகொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற்பெருகும்.
பொதுத் தனித் திருவெண்பா // பொதுத் தனித் திருவெண்பா