திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தெய்வமணி மாலை
teyvamaṇi mālai
திருப்பள்ளித்தாமம் தாங்கல்
tiruppaḷḷittāmam tāṅkal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

053. கந்தர் சரணப்பத்து
kantar saraṇappattu

    சென்னைக் கந்தகோட்டம்
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருளார் அமுதே சரணம் சரணம்
    அழகா அமலா சரணம் சரணம்
    பொருளா எனைஆள் புனிதா சரணம்
    பொன்னே மணியே சரணம் சரணம்
    மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
    மயில்வா கனனே சரணம் சரணம்
    கருணா லயனே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
  • 2. பண்ணேர் மறையின் பயனே சரணம்
    பதியே பரமே சரணம் சரணம்
    விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
    வெளியின் விளைவே சரணம் சரணம்
    உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
    உருவே அருவே உறவே சரணம்
    கண்ணே மணியே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
  • 3. முடியா முதலே சரணம் சரணம்
    முருகா குமரா சரணம் சரணம்
    வடிவேல் அரசே சரணம் சரணம்
    மயிலூர் மணியே சரணம் சரணம்
    அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
    அரியாய் பெரியாய் சரணம் சரணம்
    கடியாக் கதியே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
  • 4. பூவே மணமே சரணம் சரணம்
    பொருளே அருளே சரணம் சரணம்
    கோவே குகனே சரணம் சரணம்
    குருவே திருவே சரணம் சரணம்
    தேவே தெளிவே சரணம் சரணம்
    சிவசண் முகனே சரணம் சரணம்
    காவேர் தருவே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
  • 5. நடவும் தனிமா மயிலோய் சரணம்
    நல்லார் புகழும் வல்லோய் சரணம்
    திடமும் திருவும் தருவோய் சரணம்
    தேவர்க் கரியாய் சரணம் சரணம்
    தடவண் புயனே சரணம் சரணம்
    தனிமா முதலே சரணம் சரணம்
    கடவுள் மணியே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
  • 6. கோலக் குறமான் கணவா சரணம்
    குலமா மணியே சரணம் சரணம்
    சீலத் தவருக் கருள்வோய்சரணம்
    சிவனார் புதல்வா சரணம் சரணம்
    ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
    நடுவா கியநல் ஒளியே சரணம்
    காலன் தெறுவோய் சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
  • 7. நங்கட் கிளியாய் சரணம் சரணம்
    நந்தா உயர்சம் பந்தா சரணம்
    திங்கட் சடையான் மகனே சரணம்
    சிவைதந் தருளும் புதல்வா சரணம்
    துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம்
    சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
    கங்கைக் கொருமா மதலாய் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
  • 8. ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
    ஒன்றே பலவே சரணம் சரணம்
    தெளியும் தெருளே சரணம் சரணம்
    சிவமே தவமே சரணம் சரணம்
    அளியும் கனியே சரணம் சரணம்
    அமுதே அறிவே சரணம் சரணம்
    களியொன் றருள்வோய் சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
  • 9. மன்னே எனைஆள் வரதா சரணம்
    மதியே அடியேன் வாழ்வே சரணம்
    பொன்னே புனிதா சரணம் சரணம்
    புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
    அன்னே வடிவேல் அரசே சரணம்
    அறுமா முகனே சரணம் சரணம்
    கன்னேர் புயனே சரணம் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்
  • 10. வேதப் பொருளே சரணம் சரணம்
    விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
    போதத் திறனே சரணம் சரணம்
    புனைமா மயிலோய் சரணம் சரணம்
    நாதத் தொலியே சரணம் சரணம்
    நவைஇல் லவனே சரணம் சரணம்
    காதுக் கினிதாம் புகழோய் சரணம்
    கந்தா சரணம் சரணம் சரணம்

கந்தர் சரணப்பத்து // கந்தர் சரணப்பத்து