திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தனித் திருப்புலம்பல்
taṉit tiruppulampal
திருப்புகழ்ச்சி
tiruppukaḻchsi
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

092. பரம ராசியம்
parama rāsiyam

  எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன்
  விலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன்
  நிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன்
  நிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன்
  எதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை
  இன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன்
  பதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன்
  பரம ராசியப் பரம்பரப் பொருளே.
 • 2. செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்
  தெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்
  கொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்
  கோள னேன்நெடு நீளவஞ் சகனேன்
  அடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்
  அன்பர் தங்களோ டின்புற அருள்வாய்
  படிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்
  பரம ராசியப் பரம்பரப் பொருளே.

பரம ராசியம் // பரம ராசியம்