திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆற்றா விரக்கம்
āṟṟā virakkam
பணித்திறஞ் சாலாப் பாடிழிவு
paṇittiṟañ sālāp pāṭiḻivu
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

023. ஏழைமையின் இரங்கல்
ēḻaimaiyiṉ iraṅkal

  எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சிதம்மேவி நின்ற சிவமே
  கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே
  தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா சலத்தெம் அரசே
  நானே ழைஇங்கு மனம்நொந்து நொந்து நலிகின்ற செய்கை நலமோ.
 • 2. நலமேவு தொண்டர் அயன்ஆதி தேவர் நவைஏக நல்கு தணிகா
  சலமேவி உன்றன் இருதாள் புகழ்ந்து தரிசிப்ப தென்று புகலாய்
  நிலமேவு கின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
  வலமேவு வேல்கை ஒளிர்சேர் கலாப மயில்ஏறி நின்ற மணியே.
 • 3. மணியே கலாப மலைமேல் அமர்ந்த மதியே நினைச்சொல் மலரால்
  அணியேன் நல்அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடிக்கண் மகிழ்வாய்ப்
  பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்த படியே
  எணியே நினைக்கில் அவமாம்இவ் வேழை எதுபற்றி உய்வ தரசே.
 • 4. உய்வண்ணம் இன்றி உலகா தரத்தில் உழல்கின்ற மாய மடவார்
  பொய்வண்ணம் ஒன்றின் மனமாழ்கி அன்மை புரிதந்து நின்ற புலையேன்
  மெய்வண்ணம் ஒன்று தணிகா சலத்து மிளிர்கின்ற தேவ விறல்வேல்
  கைவண்ண உன்றன் அருள்வண்ணம் ஆன கழல்வண்ணம் நண்ணல் உளதோ.
 • 5. நண்ணாத வஞ்சர் இடம்நாடி நெஞ்சம் நனிநொந்து நைந்து நவையாம்
  புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம்பொன் அடியை
  எண்ணாத பாவி இவன்என்று தள்ளின் என்செய்வ துய்வ தறியேன்
  தண்ணார் பொழிற்கண் மதிவந் துலாவு தணிகா சலத்தி றைவனே.
 • 6. இறையேனும் உன்றன் அடிஎண்ணி அங்கி இழுதென்ன நெஞ்சம் இளகேன்
  மறைஓதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர் வழிபட் டலங்கல் அணியேன்
  குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ
  நிறையோர் வணங்கு தணிகா சலத்தில் நிலைபெற் றிருக்கும் அவனே.
 • 7. அவம்நாள் கழிக்க அறிவேன் அலாதுன் அடிபேணி நிற்க அறியேன்
  தவம்நாடும் அன்ப ரொடுசேர வந்து தணிகா சலத்தை அடையேன்
  எவன்நான் எனக்கும் அவண்நீ இருக்கும் இடம்ஈயில் உன்றன் அடியார்
  இவன்ஆர் இவன்றன் இயல்பென்ன என்னில் எவன்என் றுரைப்பை எனையே.
 • 8. எனையான் அறிந்துன் அடிசேர உன்னை இறையேனும் நெஞ்சி னிதமாய்
  நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம்என் றுழன்று துயர்வேன்
  தனையே நின்அன்பன் எனவோதி லியாவர் தகும்என் றுரைப்பர் அரசே
  வனைஏர் கொளுஞ்செய் தணிகா சலத்து மகிழ்வோ டமர்ந்த அமுதே.
 • 9. முதுவோர் வணங்கு தணிகா சலத்து முதலேஇவ் வேழை முறியேன்
  மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
  விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை விடில்ஏழை எங்கு மெலிவேன்
  இதுநீதி அல்ல எனஉன் றனக்கும் எவர்சொல்ல வல்லர் அரசே.

ஏழைமையின் இரங்கல் // ஏழைமையின் இரங்கல்