திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இறை திருக்காட்சி
iṟai tirukkāṭsi
அச்சோப் பத்து
achsōp pattu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

044. திருவடி நிலை
tiruvaṭi nilai

  எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
  உவப்பிலா அண்டத்தின் பகுதி
  அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
  அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
  விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
  றிருந்தென விருந்தன மிடைந்தே
  இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
  தென்பர்வான் திருவடி நிலையே.
 • 2. தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
  யேச்சுரன் சதாசிவன் விந்து
  நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
  நவில்பர சிவம்எனும் இவர்கள்
  இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
  இடதுகாற் கடைவிரல் நகத்தின்
  கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
  கண்டனன் திருவடி நிலையே.
 • 3. அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
  அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
  படர்தரு விந்து பிரணவப் பிரமம்
  பரைபரம் பரன்எனும் இவர்கள்
  சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
  துணையடிப் பாதுகைப் புறத்தே
  இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
  ஏத்துவன் திருவடி நிலையே.
 • 4. இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
  பிரமன்ஈ சானனே முதலாம்
  மகத்துழல் சமய வானவர் மன்றின்
  மலரடிப் பாதுகைப் புறத்தும்
  புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
  புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
  செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
  தெரிந்தனன் திருவடி நிலையே.
 • 5. பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
  போந்தவான் முடியதாங் கதன்மேல்
  மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
  வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
  என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
  தத்திலே இலங்கிய ததன்மேல்
  தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
  தழுவினன் திருவடி நிலையே.
 • 6. மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
  மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
  அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
  அமைந்தன சத்திகள் அவற்றின்
  கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
  கருதுரு முதலிய விளங்க
  நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
  நவின்றனர் திருவடி நிலையே.
 • 7. தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
  தொல்லையின் எல்லையும் அவற்றின்
  வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
  மன்னிஎங் கணும்இரு பாற்குத்
  தகையுறு முதலா வணங்கடை யாகத்
  தயங்கமற் றதுவது கருவிச்
  சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
  என்பரால் திருவடி நிலையே.
 • 8. மன்றஓங் கியமா மாயையின் பேத
  வகைதொகை விரிஎன மலிந்த
  ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா
  உற்றன மற்றவை எல்லாம்
  நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க
  நின்றசத் திகளொடு சத்தர்
  சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்
  என்பரால் திருவடி நிலையே.
 • 9. பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
  பெரியஓங் காரமே முதலா
  ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
  என்றவற் றவண்அவண் இசைந்த
  மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
  மன்அதி காரம்ஐந் தியற்றத்
  தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
  என்பரால் திருவடி நிலையே.
 • 10. பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
  பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
  உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
  வெறுவெளி எனஉல குணர்ந்த
  புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
  திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
  திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
  என்பரால் திருவடி நிலையே.

திருவடி நிலை // திருவடி நிலை

No audios found!