திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஒதவடங்காது
otavaṭaṅkātu
பசியாத அமுதே
pasiyāta amutē
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

142. விரைசேர் சடையாய்
viraisēr saṭaiyāy

  சிந்து
  திருச்சிற்றம்பலம்
 • 1. விரைசேர் சடையாய் விடையாய் உடையாய்
  விகிர்தா விபவா விமலா அமலா
  வெஞ்சேர்343 பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே.
 • 2. அரைசே குருவே அமுதே சிவமே
  அணியே மணியே அருளே பொருளே
  அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
 • 3. உருவே உயிரே உணர்வே உறவே
  உரையே பொருளே ஒளியே வெளியே
  ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர344 நம்பர னே.
 • 4. அருவே திருவே அறிவே செறிவே
  அதுவே இதுவே அடியே முடியே
  அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.

  • 343. வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு.
  • 344. உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு.

விரைசேர் சடையாய் // விரைசேர் சடையாய்