திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பொறுக்காப் பத்து
poṟukkāp pattu
ஆறெழுத் துண்மை
āṟeḻut tuṇmai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

015. வேட்கை விண்ணப்பம்
vēṭkai viṇṇappam

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே
    அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே
    பொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே
    என்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே.
  • 2. இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
    அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
    உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
    வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.
  • 3. வருவாய் என்று நாள்தோறும் வழிபார்த் திரங்கி மனந்தளர்ந்தேன்
    கருவாய் பவன்என் றெனைத்தள்ளக் கருது வாயோ அன்றிஅருள்
    உருவாய் வந்து தருவாயோ தணிகா சலத்துள் உற்றமர்ந்த
    ஒருவர் உன்றன் திருவுளத்தை உணரேன் என்செய் துய்கேனே.
  • 4. உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையேன் அந்தோ உரைக்கடங்காப்
    பொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை
    எய்யும் படிவந் தடர்ந்தியமன் இழுத்துப் பறிக்கில் என்னேயான்
    செய்யும் வகைஒன் றறியேனே தென்பால் தணிகைச் செஞ்சுடரே.
  • 5. செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே
    விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே
    வெஞ்சொல் புகலும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே
    பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே.
  • 6. பார்க்கின் றிலையே பன்னிருகண் படைத்தும் எளியேன் பாடனைத்தும்
    தீர்க்கின் றிலையே என்னேயான் செய்வேன் சிறியேன் சீமானே
    போர்க்குன் றொடுசூர் புயக்குன்றும் பொடிசெய் வேற்கைப் புண்ணியனே
    சீர்க்குன் றெனும்நல் வளத்தணிகைத் தேவே மயில்ஊர் சேவகனே.
  • 7. சேவற் கொடிகொள் குணக்குன்றே சிந்தா மணியே யாவர்கட்கும்
    காவற் பதியே தணிகைவளர் கரும்பே கனியே கற்பகமே
    மூவர்க் கிறையே வேய்ஈன்ற முத்தன் அளித்த முத்தேநல்
    தேவர்க் கருள்நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும்தெரியேனே.
  • 8. தெரியேன் உனது திருப்புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே
    பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த்
    தரியேன் தணிகை தனைக்காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே
    உரியேன் அந்தோ எதுகொண்டிங் குய்கேன் யாதுசெய்கேனே.
  • 9. செய்வ துனது திருவடிக்காம் திறனே சிந்தை நின்பாலே
    வைவ துன்னை நினையாத வஞ்ச கரையே வழுத்திநிதம்
    உய்வ துனது திருநாமம் ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால்
    எய்வ தறியேன் திருத்தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே.
  • 10. எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி
    அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பொன் றில்லேன் அதுசிறிதும்
    ஒளியேன் எந்தாய் என்உள்ளத் தொளித்தே எவையும் உணர்கின்றாய்
    வளியே முதலாய் நின்றருளும் மணியே தணிகை வாழ்மன்னே.

வேட்கை விண்ணப்பம் // வேட்கை விண்ணப்பம்