Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
குறி ஆராய்ச்சி
kuṟi ārāychsi
ஆற்றாக் காதலின் இரங்கல்
āṟṟāk kātaliṉ iraṅkal
மூன்றாம் திருமுறை / Third Thirumurai
012. காட்சி அற்புதம்
kāṭsi aṟputam
தலைவி இரங்கல்
திருவொற்றியூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
பூணா அணிபூண் புயமுடையார் பொன்னம் பலத்தார் பொங்குவிடம்
ஊணா உவந்தார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உண்மைசொலி
நீணால் இருந்தார் அவர்இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே
காணா தயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
2.
ஓட்டில் இரந்துண் டொற்றியிடை உற்றார் உலகத் துயிரைஎலாம்
ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளிய ளாம்எனவே
ஏட்டில் அடங்காக் கையறவால் இருந்தேன் இருந்த என்முன்உருக்
காட்டி மறைத்தார் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
3.
ஈதல் ஒழியா வண்கையினார் எல்லாம் வல்ல சித்தர்அவர்
ஓதல் ஒழியா ஒற்றியில்என் உள்ளம் உவக்க உலகம்எலாம்
ஆதல் ஒழியா எழில்உருக்கொண் டடைந்தார் கண்டேன் உடன்காணேன்
காதல் ஒழியா தென்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
4.
தொண்டு புரிவோர் தங்களுக்கோர் துணைவர் ஆவார் சூழ்ந்துவரி
வண்டு புரியுங் கொன்றைமலர் மாலை அழகர் வல்விடத்தை
உண்டு புரியுங் கருணையினார் ஒற்றி யூரர் ஒண்பதத்தைக்
கண்டுங் காணேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
5.
அடியர் வருந்த உடன்வருந்தும் ஆண்டை அவர்தாம் அன்றயனும்
நெடிய மாலுங் காணாத நிமல உருவோ டென்எதிரே
வடியல் அறியா அருள்காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கைநல்லார்
கடிய அயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
6.
கொற்றம் உடையார் திருஒற்றிக் கோயில்உடையார் என்எதிரே
பொற்றை மணித்தோட் புயங்காட்டிப் போனார் என்னைப் புலம்பவைத்துக்
குற்றம் அறியேன் மனநடுக்கங் கொண்டேன் உடலங் குழைகின்றேன்
கற்றிண் முலையாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
7.
ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார் ஆதி நடுவீ றாகிநின்றார்
நீல மிடற்றார் திருஒற்றி நியமத் தெதிரே நீற்றுருவக்
கோல நிகழக் கண்டேன்பின் குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும்
காலம் அறியேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
8.
சலங்கா தலிக்கும் தாழ்சடையார் தாமே தமக்குத் தாதையனார்
நிலங்கா தலிக்கும் திருஒற்றி நியமத் தெதிரே நின்றனர்காண்
விலங்கா தவரைத் தரிசித்தேன் மீட்டுங் காணேன் மெய்மறந்தேன்
கலங்கா நின்றேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
9.
நிரந்தார் கங்கை நீள்சடையார் நெற்றி விழியார் நித்தியனார்
சிரந்தார் ஆகப் புயத்தணிவார் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
பரந்தார் கோயிற் கெதிர்நிற்கப் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன்
கரந்தார் கலுழ்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
10.
அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டிநின்றார்
தளித்தார் சோலை ஒற்றியிடைத் தமது வடிவம் காட்டியுடன்
ஒளித்தார் நானும் மனம்மயங்கி உழலா நின்றேன் ஒண்தொடிக்கைக்
களித்தார் குழலாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
காட்சி அற்புதம் // காட்சி அற்புதம்
No audios found!
Oct,12/2014: please check back again.