திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கணேசத் திருஅருள் மாலை
kaṇēsat tiruaruḷ mālai
பிரார்த்தனை மாலை
pirārttaṉai mālai
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

004. தனித் திருமாலை
taṉit tirumālai

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
    மங்கைவல் லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
    ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
    கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி.
  • கலிவண்ணத் துறை
  • 2. உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
    கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
    திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
    இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே.
  • 3. அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
    கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
    பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
    அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே.
  • எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 4. கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்உறு கரிசகல அருள்செய்பசு பதியாம்
    நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக நிலையைஅருள் புரியும்அதிபதியாம்
    விமலபிர ணவவடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம்
    அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபயஎனும் எமதுகண பதியே.
  • கட்டளைக் கலித்துறை
  • 5. அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
    கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
    வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
    கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே.
  • 6. திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
    இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
    குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
    வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே.

கணேசத் தனித் திருமாலை // தனித் திருமாலை