திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருட்பிரகாச மாலை
aruṭpirakāsa mālai
ஆனந்த மாலை
āṉanta mālai
நான்காம் திருமுறை / Fourth Thirumurai

003. பிரசாத மாலை
pirasāta mālai

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
    திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
    தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
    தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
    மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
    மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
    குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும்
    குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே.
  • 2. என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
    என்முன்அடைந் தெனைநோக்கி ஔநகைசெய் தருளித்
    தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
    தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
    மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
    வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
    உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
    ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.
  • 3. அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே
    அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
    கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு
    களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
    குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்
    கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே
    மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி
    மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே.
  • 4. விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து
    வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக்
    கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக்
    கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி
    அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன்
    அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
    மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட
    மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே.
  • 5. உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி
    உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்பு
    மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை
    மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம்
    அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில்
    அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
    கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்
    கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே.
  • 6. பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த
    பெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன்
    மழைஎனநின் றிலகுதிரு மணிமிடற்றில் படிக
    வடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து
    விழைவினொடென் எதிர்நின்று திருநீற்றுக் கோயில்
    விரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய்
    குழைஅசையக் சடைஅசையக் குலவுபொன்னம் பலத்தே
    கூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே.
  • 7. முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
    முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
    எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
    என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
    சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
    தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
    அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
    ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
  • 8. தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
    சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
    உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்
    உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
    கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்
    கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
    கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்
    கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே.
  • 9. கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்
    கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து
    மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து
    வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்
    பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
    பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
    பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்187உளங் களிப்பப்
    பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப்
    பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே.
  • 10. உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம்
    ஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி
    முன்னதற்கோர் அணுத்துணையுந் தரமில்லாச் சிறியேன்
    முகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய்
    துன்னுதற்கிங் கரிதாம்நின் திருஉள்ளக் குறிப்பைத்
    துணிந்தறியேன் என்னினும்ஓர் துணிவின்உவக் கின்றேன்
    பொன்னுதற்குத் திலகமெனுஞ் சிவகாம வல்லிப்
    பூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே.

    • 187. இருவர் பெரியர் - பதஞ்சலி, வியாக்கிரபாதர். ச.மு.க.

பிரசாத மாலை // பிரசாத மாலை