திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பிரசாத மாலை
pirasāta mālai
பத்தி மாலை
patti mālai
நான்காம் திருமுறை / Fourth Thirumurai

004. ஆனந்த மாலை
āṉanta mālai

    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்
    சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்
    தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை
    சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
    பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து
    போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே
    பருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே
    பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே.
  • 2. சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
    தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
    செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்
    சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
    பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
    பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
    எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்
    எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே.
  • 3. அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
    அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
    தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
    சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
    மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
    மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
    இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
    எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே.
  • 4. மாடையேன் பிழைஅனைத்தும் பொறுத்தவர மளித்தாள்
    மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
    தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
    சிவகாம வல்லிபெருந் தேþவிஉளங் களிப்பக்
    காசுடைய பவக்கோடைக் கொருதிநிழலாம் பொதுவில்
    கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
    ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
    அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே.
  • 5. பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்
    பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்
    செய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்
    சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
    கையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்
    களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி
    நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்
    நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே.
  • 6. அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
    அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
    திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்
    சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
    மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்
    மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
    புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்
    புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே.
  • 7. உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை
    ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்
    தெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்
    சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
    கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்
    கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே
    எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால்
    இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே.
  • 8. பார்பூத்த பசுங்கொடிபொற் பாலைவயர்கள் அரசி
    பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி
    சீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள்
    சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
    ஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும்
    என்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து
    கார்பூத்த கனைமழைபோல் கண்களின்நீர் சொரிந்து
    கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே.
  • 9. பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
    பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னனாள்
    தேரணியும் நெடுவிதித் தில்லைநக ருடையாள்
    சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
    ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி
    இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
    தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்
    தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே.
  • 10. தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை
    தற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி
    சின்னவய தினில்என்னை ஆளநினக் கிசைத்தாள்
    சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
    மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து
    வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை
    உன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள்
    உடையானே நின்னருளின் அ€டாளம் இதுவே.

ஆனந்த மாலை // ஆனந்த மாலை