9. உம்பர்தமக் கரிதாம்உன் பதத்தை அன்றி
ஒன்றுமறி யார்உன்னை உற்றோர் எல்லாம்
இம்பர்வினை யுடையேன்நான் ஒருவன் பாவி
எட்டுணையும் நினைந்தறியேன் என்றும் எங்கும்
வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே
மனம்உடையேன் உழைத்திளைத்த மாடு போல்வேன்
அம்பலத்தெம் அரசேஇவ் வாழ்க்கைத் துன்பில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.