திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
எழுத்தறியும் பெருமான் மாலை
eḻuttaṟiyum perumāṉ mālai
திருப்புகழ் விலாசம்
tiruppukaḻ vilāsam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

021. நெஞ்சொடு நேர்தல்
neñsoṭu nērtal

    திருவொற்றியூர்
    கலிவிருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
    பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்
    மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
    துக்க மியாவையும் தூர ஓடுமே.
  • 2. ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டிநீ
    நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள்
    பாடும் எம்படம் பக்க நாதன்தாள்
    நாடு நாடிடில் நாடு நம்மதே.
  • 3. நம்பு நெஞ்சமே நன்மை எய்துமால்
    அம்பு யன்புகழ் அண்ணல் ஒற்றியூர்ப்
    பம்பு சீர்ப்படம் பக்கன் ஒன்னலார்
    தம்பு ரஞ்சுடும் தம்பி ரானையே.
  • 4. தம்ப லம்பெறும் தைய லார்கணால்
    வெம்ப லந்தரும் வெய்ய நெஞ்சமே
    அம்ப லத்தினில் அமுதை ஒற்றியூர்ச்
    செம்ப லத்தைநீ சிந்தை செய்வையே.
  • 5. செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
    உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
    மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
    பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.
  • 6. வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர்
    ஆண்டு நின்றருள் அரசின் பொற்பதம்
    பூண்டு கொண்டுளே போற்றி நிற்பையேல்
    யாண்டும் துன்பம்நீ அடைதல் இல்லையே.
  • 7. இல்லை உண்டென எய்தி ஐயுறும்
    கல்லை யொத்தஎன் கன்ம நெஞ்சமே
    ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
    நல்லை நல்லைநீ நட்பின் மேலையே.
  • 8. மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
    ஓலை காட்டுமுன் ஒற்றி யூரில்வாழ்
    பாலை சேர்படம் பக்க நாதர்தம்
    காலை நாடிநற் கதியின் நிற்பையே.
  • 9. நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே
    அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே
    சிற்ப ரன்திருத் தில்லை அம்பலப்
    பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.
  • 10. போற்றி ஒற்றியூர்ப் புண்ணி யன்திரு
    நீற்றி னான்தனை நினைந்து நிற்பையேல்
    தோற்ற ரும்பரஞ் சோதி நல்அருள்
    ஊற்றெ ழும்கடல் ஒக்க நெஞ்சமே.

நெஞ்சொடு நேர்தல் // நெஞ்சொடு நேர்தல்

No audios found!