7. மருள்அ ளித்தெனை மயக்கிஇவ் உலகில்
வருத்து கின்றனை மற்றெனக் குன்றன்
அருள்அ ளிக்கிலை ஆயினும் நினக்கே
அடிமை யாக்கிலை ஆயினும் வேற்றுப்
பொருள்அ ளிக்கிலை ஆயினும் ஒருநின்
பொன்மு கத்தைஓர் போது கண் டிடவே
தெருள்அ ளித்திடில் போதும் இங் குனது
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
8. மாறு கின்றனன் நெஞ்சகம் அஞ்சி
வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல்
கூறு கின்றதென் என்றயர் கின்றேன்
குலவித் தேற்றும்அக் கொள்கையர் இன்றி
ஏறு கின்றனன் இரக்கமுள் ளவன்நம்
இறைவன் இன்றருள் ஈகுவன் என்றே
தேறு கின்றனன் என்செய்கேன் நினது
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.