திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
காட்சி அற்புதம்
kāṭsi aṟputam
திருக்கோலச் சிறப்பு
tirukkōlach siṟappu
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

013. ஆற்றாக் காதலின் இரங்கல்
āṟṟāk kātaliṉ iraṅkal

  திருவொற்றியூர்
  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. மந்தா கினிவான் மதிமத்தம் மருவும் சடையார் மாசடையார்
  நுந்தா விளக்கின் சுடர்அனையார் நோவ நுதலார் கண்நுதலார்
  உந்தா ஒலிக்கும் ஓதமலி ஒற்றி யூரில் உற்றெனக்குத்
  தந்தார் மையல் என்னோஎன் சகியே இனிநான் சகியேனே.
 • 2. பூமேல் அவனும் மால்அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
  சேமேல் வருவார் திருஒற்றித் தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
  தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
  தாமேல் அழற்பூத் தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
 • 3. கருணைக் கொருநேர் இல்லாதார் கல்லைக் கரைக்கும் கழலடியார்
  அருணைப் பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவா வடுதுறையார்
  இருணச் சியமா மணிகண்டர் எழிலார் ஒற்றி இறைவர்இந்தத்
  தருணத் தின்னும் சேர்ந்திலர்என் சகியே இனிநான் சகியேனே.
 • 4. ஆரா அமுதாய் அன்புடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார்
  தீரா வினையும் தீர்த்தருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார்
  பாரார் புகழும் திருஒற்றிப் பரமர் தமது தோள் அணையத்
  தாரார் இன்னும் என்செய்கேன் சகியே இனிநான் சகியேனே.
 • 5. துதிசெய் அடியர் தம்பசிக்குச் சோறும் இரப்பார் துய்யர்ஒரு
  நதிசெய் சடையார் திருஒற்றி நண்ணும் எனது நாயகனார்
  மதிசெய் துயரும் மதன்வலியும் மாற்ற இன்னும் வந்திலரே
  சதிசெய் தனரோ என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே.
 • 6. எங்கள் காழிக் கவுணியரை எழிலார் சிவிகை எற்றிவைத்தோர்
  திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திருவாழ் ஒற்றியினார்
  அங்கள் அணிபூந் தார்ப்புயத்தில் அணைத்தார் அல்லர் எனைமடவார்
  தங்கள் அலரோ தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
 • 7. காவி மணந்த கருங்களத்தார் கருத்தர் எனது கண்அனையார்
  ஆவி அனையார் தாய்அனையார் அணிசேர் ஒற்றி ஆண்தகையார்
  பூவின் அலங்கல் புயத்தில்எனைப் புல்லார் அந்திப் பொழுதில்மதி
  தாவி வருமே என்செயுமோ சகியே இனிநான் சகியேனே.
 • 8. மலஞ்சா திக்கும் மக்கள்தமை மருவார் மருவார் மதில்அழித்தார்
  வலஞ்சா திக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்ப்பதத்தார்
  நிலஞ்சா திக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல்
  சலஞ்சா தித்தார் என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே.
 • 9. நாக அணியார் நக்கர்எனும் நாமம்உடையார் நாரணன்ஓர்
  பாகம் உடையார் மலைமகள்ஓர் பாங்கர் உடையார் பசுபதியார்
  யோகம் உடையார் ஒற்றியுளார் உற்றார் அல்லர் உறுமோக
  தாகம் ஒழியா தென்செய்கேன் சகியே இனிநான் சகியேனே.
 • 10. தீர்ந்தார் தலையே கலனாகச் செறித்து நடிக்கும் திருக்கூத்தர்
  தேர்ந்தார் தம்மைப் பித்தடையச் செய்வார் ஒற்றித் தியாகர்அவர்
  சேர்ந்தார் அல்லர் இன்னும்எனைத் தேடி வரும்அத் தீமதியம்
  சார்ந்தால் அதுதான் என்செயுமோ சகியே இனிநான் சகியேனே.
 • 11. ஆயும் படிவத் தந்தணனாய் ஆரூ ரன்தன் அணிமுடிமேல்
  தோயும் கமலத் திருவடிகள் சூட்டும் அதிகைத் தொன்னகரார்
  ஏயும் பெருமை ஒற்றியுளார் இன்னும் அணையார் எனைஅளித்த
  தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனிநான் சகியேனே.

ஆற்றாக் காதலின் இரங்கல் // ஆற்றாக் காதலின் இரங்கல்

No audios found!