திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிங்கபுரிக் கந்தர் பதிகம்
siṅkapurik kantar patikam
ஆனந்த நடனப் பதிகம்
āṉanta naṭaṉap patikam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

075. தெய்வத் தனித் திருமாலை
teyvat taṉit tirumālai

    திருச்சிற்றம்பலம்
    வஞ்சித்துறை
  • 1. ஐங்கரன் அடிமலர்
    இங்குற நினைதிநின்
    பொங்குறு துயரறும்
    மங்கலின் மனனனே.
  • குறள் வெண்செந்துறை
  • 2. திருமால் அறியாச் சேவடி யாலென்
    கருமால் அறுக்குங் கணபதி சரணம்.
  • கலிவிருத்தம்
  • 3. துதிபெறு கணபதி இணையடி மலரும்
    பதிதரு சரவண பவன்மல ரடியுங்
    கதிதரு பரசிவன்இயலணி கழலும்
    மதியுற மனனிடை மருவுது மிகவே.
  • 4. அருளுறுங் கயமுகத் தண்ணல் பாதமும்
    பொருளுறு சண்முகப் புனிதன் தாள்களும்
    தெருளுறு சிவபிரான் செம்பொற் கஞ்சமும்
    மருளற நாடொறும் வணங்கி வாழ்த்துவாம்.
  • 5. அற்புதக் கணபதி அமல போற்றியே
    தற்பர சண்முக சாமி போற்றியே
    சிற்பர சிவமகா தேவ போற்றியே
    பொற்பமர் கௌரிநிற் போற்றி போற்றியே.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 6. மாதங்க முகத்தோன்நங் கணபதிதன் செங்கமல மலர்த்தாள் போற்றி
    ஏதங்கள் அறுத்தருளுங் குமரகுருபரன்பாத இணைகள் போற்றி
    தாதங்க மலர்க்கொன்றைச் சடையுடைய சிவபெருமான் சரணம் போற்றி
    சீதங்கொள் மலர்க்குழலாள் சிவகாம சவுந்தரியின் திருத்தாள் போற்றி.
  • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 7. கலைநிறை கணபதி சரணஞ் சரணம்
    கஜமுக குணபதி சரணஞ் சரணம்
    தலைவநின் இணையடி சரணஞ் சரணம்
    சரவண பவகுக சரணஞ் சரணம்
    சிலைமலை யுடையவ சரணஞ் சரணம்
    சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்
    உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்
    உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம்.

தெய்வத் தனித் திருமாலை // தெய்வத் தனித் திருமாலை