திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
உள்ளப் பதிகம்
uḷḷap patikam
நெஞ்சொடு நெகிழ்தல்
neñsoṭu nekiḻtal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

087. சரணப் பதிகம்
saraṇap patikam

  கலிநிலைத்துறை
  திருச்சிற்றம்பலம்
 • 1. மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்
  நிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்
  துதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்
  பதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே.
 • 2. படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்
  முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்
  கொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே
  பொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே.
 • 3. புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன்
  அண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல்
  கண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை
  எண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே.
 • 4. செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன்
  நைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல்
  உய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய்
  வைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே.
 • 5. மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
  இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
  உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
  பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே.
 • 6. என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை
  முன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ
  பொன்னேர் அணிஅம் பலத்தா டியபுண்ணி யாஎன்
  அன்னே அரசே அமுதே அருள்ஆண்ட வனே.
 • 7. ஆண்டாய் எனைஏழ் பிறப்பும் உனைஅன்றி ஒன்றும்
  தீண்டா தெனதுள் ளம்என்றால் என்சிறுமை தீர்க்க
  வேண்டா தயலார் எனக்காண் பதென்மெய்ய னேபொன்
  ஆண்டான் திருஎய் தநஞ்சைக் களம்நாட்டி னோயே.
 • 8. நாட்டார் நகைசெய் வர்என்றோ அருள்நல்கி லாய்நீ
  வீட்டார் நினைஎன் னினைப்பார் எனைமேவி லாயேல்
  தாட்டா மரைஅன் றித்துணை ஒன்றும்சார்ந் திலேன்என்
  மாட்டா மைஅறிந் தருள்வாய் மணிமன்று ளானே.
 • 9. மன்றா டியமா மணியே தனிவான வாஓர்
  மின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன்
  பொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று
  நன்றாய் இரவும் பகலும் உனைநாடு மாறே.
 • 10. மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி
  ஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்
  தேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்
  பேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே.
 • 11. ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்
  மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
  தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
  தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே.

சரணப் பதிகம் // சரணப் பதிகம்

No audios found!