திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
வெண்ணிலா
veṇṇilā
சிலதா ஸம்வாதம்
silatā shamvātam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

105. நடேசர் கொம்மி
naṭēsar kommi

  சிந்து
  திருச்சிற்றம்பலம்
  பல்லவி
 • 1. கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
  கொங்கைகு லுங்கவே கொம்மி யடி.
 • பல்லவி எடுப்பு
 • 2. நம்மை யாளும்பொன் னம்பல வாணனை
  நாடிக் கொம்மிய டியுங்க டி - பதம்
  பாடிக் கொம்மிய டியுங்க டி. - கொம்மி
 • கண்ணிகள்
 • 3. காம மகற்றிய தூய னடி - சிவ
  காம சவுந்தரி நேய னடி
  மாமறை யோதுசெவ் வாய னடி - மணி
  மன்றெனு ஞானவா காய னடி. - கொம்மி
 • 4. ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை
  ஆட்கொண் டருளிய தேஜ னடி
  வானந்த மாமலை மங்கை மகிழ் - வடி
  வாளன டிமண வாள னடி. - கொம்மி
 • 5. கல்லைக் கனிவிக்குஞ் சுத்த னடி - முடி
  கங்கைக் கருளிய கர்த்த னடி
  தில்லைச்சி தம்பர சித்த னடி - தேவ
  சிங்கம டியுயர் தங்க மடி. - கொம்மி
 • 6. பெண்ணொரு பால்வைத்த மத்த னடி - சிறு
  பிள்ளைக் கறிகொண்ட பித்த னடி
  நண்ணி நமக்கரு ளத்த னடி - மிக
  நல்லன டியெல்லாம் வல்ல னடி.. - கொம்மி
 • 7. அம்பலத் தாடல்செய் ஐய னடி - அன்பர்
  அன்புக் கெளிதரு மெய்ய னடி
  தும்பை முடிக்கணி தூய னடி - சுயஞ்
  சோதிய டிபரஞ் சோதி யடி. - கொம்மி
 • 8. கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
  கொங்கைகு லுங்கவே கொம்மி யடி.

நடேசர் கொம்மி // நடேசர் கொம்மி