திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிலதா ஸம்வாதம்
silatā shamvātam
இன்னந் தயவு வரவிலையா
iṉṉan tayavu varavilaiyā
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

107. நடேசர் கீர்த்தனை
naṭēsar kīrttaṉai

    சிந்து
    பல்லவி
    திருச்சிற்றம்பலம்
  • 1. தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
    தெண்டனிட்டே னென்று சொல்ல டி.
  • பல்லவி எடுப்பு
  • 2. தண்டலை விளங்குந் தில்லைத் தலத்திற்பொன் னம்பலத்தே
    கண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு தெண்ட
  • கண்ணிகள்
  • 3. கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே
    கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட
    அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
    ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட
  • 4. இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்
    ஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்
    பழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்
    பசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்குதெண்ட
  • 5. சுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத்
    தோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப்
    பிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப்
    பிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடருக்கு தெண்ட
  • 6. வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு
    மாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்
    தாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்
    தானாகி நானாகித் தனியேநின் றவருக்குதெண்ட
  • 7. ஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு
    அண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்
    சோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்
    தொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட
  • 8. பாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ப்
    பண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு
    வீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே
    வேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு தெண்ட
  • 9. தாய்வறிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்
    சாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு
    ஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு
    ஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு
  • 10. தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
    தெண்டனிட்டே னென்று சொல்ல டி.

தெண்டனிட்டேன் // நடேசர் கீர்த்தனை