திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நற்றாய் கவன்றது
naṟṟāy kavaṉṟatu
வேட்கைக் கொத்து
vēṭkaik kottu
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

111. சல்லாப லகரி
sallāpa lakari

  கலிநிலைத்துறை
  திருச்சிற்றம்பலம்
 • 1. சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்
  வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ
  மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்
  அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
 • 2. நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
  எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
  வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
  அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.

சல்லாப லகரி // சல்லாப லகரி