திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருள் ஆரமுதப் பேறு
aruḷ āramutap pēṟu
இறை இன்பக் குழைவு
iṟai iṉpak kuḻaivu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

055. உபதேச உண்மை
upatēsa uṇmai

  கலிவிருத்தம்
  பண்: நட்டராகம்
  திருச்சிற்றம்பலம்
 • 1. கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே
  விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே
  தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே
  உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
 • 2. வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
  வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
  அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
  ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
 • 3. அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
  என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
  இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
  உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
 • 4. தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
  அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
  இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
  உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
 • 5. துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே
  அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
  இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
  ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
 • 6. என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
  நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
  மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
  ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
 • 7. திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
  கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
  மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
  உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
 • 8. தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
  அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
  கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
  உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
 • 9. பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
  அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
  எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
  உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
 • 10. நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
  பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
  என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
  உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.

ஞானோபதேசம் // உபதேச உண்மை