திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஜோதியுள் ஜோதி
jōtiyuḷ jōti
இது நல்ல தருணம்
itu nalla taruṇam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

120. அஞ்சாதே நெஞ்சே
añsātē neñsē

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
    அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே.
  • 2. வஞ்சமி லார்நாம்293 வருந்திடில் அப்போதே
    அஞ்சலென் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 3. துய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை
    அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 4. மண்ணில் நமையாண்ட வள்ளலார் நம்முடை
    அண்ணல் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 5. இப்புவி யில்நம்மை ஏன்றுகொண் டாண்டநம்
    அப்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 6. சித்தர் எலாம்வல்ல தேவர் நமையாண்ட
    அத்தர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 7. சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
    ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 8. தாண்டவ னார்என்னைத் தான்தடுத் தாட்கொண்ட
    ஆண்டவ னார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 9. வன்பர் மனத்தை மதியா தவர்நம
    தன்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 10. தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு
    அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 11. நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம
    தம்மை யினோடிதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 12. தன்னைஒப் பார்சிற் சபைநடஞ் செய்கின்றார்
    அன்னைஒப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 13. பாடுகின் றார்க்கருட் பண்பினர் ஞானக்கூத்
    தாடுகின் றார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 14. காதரிப் பார்கட்குக் காட்டிக் கொடார்நம்மை
    ஆதரிப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 15. நீளவல் லார்க்குமேல் நீளவல்லார் நம்மை
    ஆளவல் லார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 16. இன்புடை யார்நம் இதயத் தமர்ந்தபே
    ரன்புடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 17. உபய பதத்தைநம் உச்சிமேற் சூட்டிய
    அபயர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 18. வேண்டுகொண் டார்என்னை மேல்நிலைக் கேற்றியே
    ஆண்டுகொண் டார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 19. எச்சம்பெ றேல்மக னேஎன்றென் னுள்உற்ற
    அச்சம் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 20. நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான
    அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 21. செடிகள் தவிர்த்தருட் செல்வ மளிக்கின்ற
    அடிகள் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 22. விரசுல கெல்லாம் விரித்தைந் தொழில்தரும்
    அரசுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
  • 23. செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற
    அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார்
  • 24. அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
    அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே

    • 293. வஞ்சமிலா நாம் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா. பதிப்பு.

அஞ்சாதே நெஞ்சே // அஞ்சாதே நெஞ்சே