திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆடிய பாதம்
āṭiya pātam
அற்புதம் அற்புதமே
aṟputam aṟputamē
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

126. அபயம் அபயம் அபயம்
apayam apayam apayam

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. அபயம் அபயம் அபயம்.
  • கண்ணிகள்
  • 2. உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச்
    சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே296 அபயம்
  • 3. எம்பலத் தால்எம்மை ஏன்றுகொ ளத்தில்லை
    அம்பலத் தாடும்எம் ஐயர் பதத்திற்கே அபயம்
  • 4. தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும்
    சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே அபயம்
  • 5. ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே
    என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே அபயம்
  • 6. வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின்
    றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே அபயம்
  • 7. நாரா யணனொடு நான்முக னாதியர்
    பாரா யணம்செயும் பதும பதத்திற்கே அபயம்
  • 8. அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்
    தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே அபயம்
  • 9. குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம்
    அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே அபயம்
  • 10. செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும்
    நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே அபயம்
  • 11. வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
    அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே அபயம்
  • 12. எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
    புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்
  • 13. மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
    பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே அபயம்
  • 14. நாத முடியில்297 நடம்புரிந் தன்பர்க்குப்
    போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே அபயம்
  • 15. உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
    சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே அபயம்
  • 16. சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
    புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம்
  • 17. அபயம் அபயம் அபயம்.

    • 296. பாதத்திற்கே - பி. இரா., ஆ. பா.
    • 297. முடிவில் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.

அபயம் அபயம் // அபயம் அபயம் அபயம்