Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
அஞ்சாதே நெஞ்சே
añsātē neñsē
என்ன புண்ணியம் செய்தேனோ
eṉṉa puṇṇiyam seytēṉō
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
121. இது நல்ல தருணம்
itu nalla taruṇam
சிந்து
திருச்சிற்றம்பலம்
பல்லவி
1.
இதுநல்ல தருணம் - அருள்செய்ய
இதுநல்ல தருணம்.
பல்லவி எடுப்பு
2.
பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்
பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். இதுநல்ல
கண்ணிகள்
3.
மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல
4.
குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
குதித்த
314
மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல
5.
கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
தாபமும் சோபமும் தான்தானே சென்றது
தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இதுநல்ல
6.
கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது
புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று
பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.
7.
இதுநல்ல தருணம் - அருள்செய்ய
இதுநல்ல தருணம்.
314. கொதித்த - முதற்பதிப்பு., பொ சு, பி. இரா., ச. மு. க.
இது நல்ல தருணம் // இது நல்ல தருணம்
[6-121, 4501]SDS--Ithunalla TharuNam.mp3
Download
[6-121, 4501]MSS--Ithunalla TharuNam.mp3
Download