திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
எண்ணத் தேங்கல்
eṇṇat tēṅkal
அடியார்பணி அருளவேண்டல்
aṭiyārpaṇi aruḷavēṇṭal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

035. கையடை முட்டற் கிரங்கல்
kaiyaṭai muṭṭaṟ kiraṅkal

  கட்டளைக் கலித்துறை
  திருச்சிற்றம்பலம்
 • 1. கார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து
  சீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்அமுதே
  பேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன்
  ஏர்பூத்த ஒண்பளி தம்11 காண் கிலன்அதற் கென்செய்வனே.
 • 2. கருமருந் தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம்
  அருமருந் தேதணி காசலம் மேவும்என் ஆருயிரே
  திருமருங் கார்ஒற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்
  ஒருமருங் கேற்றஎன் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே.
 • 3. பால்எடுத் தேத்தும்நற் பாம்பொடு வேங்கையும் பார்த்திடஓர்
  கால்எடுத் தம்பலத் தாடும் பிரான்திருக் கண்மணியே
  வேல்எடுத் தோய்தென் தணிகா சலத்தமர் வித்தகநின்
  பால்எடுத் தேற்றக் கிடைக்குங் கொலோவெண் பளிதம்எற்கே.
 • 4. கண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்
  திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டன்இட்ட
  விண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
  தெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே.

  • 11. பளிதம் - கர்ப்பூரம்

கையடை முட்டற் கிரங்கல் // கையடை முட்டற் கிரங்கல்