திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
கையடை முட்டற் கிரங்கல்
kaiyaṭai muṭṭaṟ kiraṅkal
நாள் அவம்படாமை வேண்டல்
nāḷ avampaṭāmai vēṇṭal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

036. அடியார்பணி அருளவேண்டல்
aṭiyārpaṇi aruḷavēṇṭal

    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள்என்
    அப்பாஉன் பொன்னடிக் கென்நெஞ் சகம்இட மாக்கிமிக்க
    வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்
    திப்பாரில் நின்அடி யார்க்கேவல் செய்ய எனக்கருளே.
  • 2. எய்யா தருள்தணி காசலம் மேவிய என்அருமை
    ஐயா நினது திருவடி ஏத்திஅன் றோஅயனும்
    செய்யாள் மருவும் புயனுடைத் தேவனும் சேணவனும்
    நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே.
  • 3. வாளாருங் கண்ணியர் மாயையை நீக்கி மலிகரணக்
    கோளாகும் வாதனை நீத்துமெய்ஞ் ஞானக் குறிகொடுநின்
    தாளாகும் நீழல் அதுசார்ந்து நிற்கத் தகுந்ததிரு
    நாளாகும் நாள்எந்த நாள்அறி யேன்தணி காசலனே.
  • 4. ஊன்பார்க்கும் இவ்வுடற் பொய்மையைத் தேர்தல் ஒழிந்தவமே
    மான்பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம்அற்றே
    தேன்பார்க்கும் சோலைத் தணிகா சலத்துன் திருஅழகை
    நான்பார்க்கும் நாள்எந்த நாள்மயில் ஏறிய நாயகனே.
  • 5. என்னே குறைநமக் கேழைநெஞ் சேமயில் ஏறிவரும்
    மன்னே எனநெடு மாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
    தன்னேர் தணிகைத் தடமலை வாழும்நற் றந்தைஅருள்
    பொன்னேர் திருவடிப் போதுகண் டாய்நம் புகலிடமே.
  • 6. பேதைநெஞ் சேஎன்றன் பின்போந் திடுதிஇப் பேயுலக
    வாதைஅஞ் சேல்பொறி வாய்க்கலங் கேல்இறை யும்மயங்கேல்
    போதையெஞ் சேல்தணி காசலம் போய்அப் பொருப்பமர்ந்த
    தாதைஅஞ் சேவடிக் கீழ்க்குடி யாகத் தயங்குவமே.

அடியார்பணி அருளவேண்டல் // அடியார்பணி அருளவேண்டல்