திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆணிப்பொன்னம்பலக் காட்சி
āṇippoṉṉampalak kāṭsi
ஊதூது சங்கே
ūtūtu saṅkē
  சிந்து
  திருச்சிற்றம்பலம்
 • 1. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
  மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி
  மயில்குயில் ஆச்சுத டி.
 • 2. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
  வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி
  வள்ளலைக் கண்டேன டி.
 • 3. சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
  சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
  சோதியைக் கண்டேன டி.
 • 4. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
  ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி
  ஐயரைக் கண்டேன டி.

  • 334. மயில் - விந்து. குயில் - நாதம்.

அருட்காட்சி // அக்கச்சி