திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஊதூது சங்கே
ūtūtu saṅkē
கண்புருவப் பூட்டு
kaṇpuruvap pūṭṭu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

131. சின்னம் பிடி
siṉṉam piṭi

  தாழிசை
  திருச்சிற்றம்பலம்
 • 1. அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி
  அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி
  செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி
  சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.
 • 2. சிற்சபையைக் கண்டோம்என்று சின்னம் பிடி
  சித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி
  பொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி
  புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி.
 • 3. ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி
  நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி
  ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி
  அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி.
 • 4. கொடிகட்டிக்கொண்டோம்என்று சின்னம் பிடி
  கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி
  அடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி
  அருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி.
 • 5. அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி
  அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி
  செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி
  சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி.
 • 6. தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி
  சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
  ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
  ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.
 • 7. வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
  வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
  சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
  சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.
 • 8. மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
  வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி
  வேதாக மம்கடந்து சின்னம் பிடி
  வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.
 • 9. பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி
  பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி
  சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி
  சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி.
 • 10. சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி
  செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி
  இத்தா ரணியில்என்று சின்னம் பிடி
  இதுவே தருணம்என்று சின்னம் பிடி.

சின்னம் பிடி // சின்னம் பிடி