திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அவத்தொழிற் கலைசல்
avattoḻiṟ kalaisal
அவல மதிக்கு அலைசல்
avala matikku alaisal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

042. நாள் அவத்து அலைசல்
nāḷ avattu alaisal

    திருவொற்றியூர்
    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. இன்றிருந் தவரை நா€ளைஇவ் வுலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ
    என்றிருந் தவத்தோர் அரற்றுகின் றனரால் ஏழையேன் உண்டுடுத் தவமே
    சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ
    மன்றிருந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
  • 2. தாவியே இயமன் தமர்வரும் அந்நாள் சம்புநின் திருவருள் அ€டையாப்
    பாவியேன் செய்வ தென்என நெஞ்சம் ப€தைப€தைத் துருகுகின் றனன்காண்
    கூவியே எனக்குன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய்வ€கை அறியேன்
    வாவிஏர் பெறப்பூஞ் சோ€லைசூழ்ந் தோங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
  • 3. நீரின்மேல் எழுதும் எழுத்தினும் வி€ரைந்து நி€லைபடா உடம்பி€னை ஓம்பிப்
    பாரின்மேல் அ€லையும் பாவியேன் தனக்குப் பரிந்தருள் பாலியாய் என்னில்
    காரின்மேல் வரல்போல் கடாமி€சை வரும்அக் காலன்வந் திடில்எது செய்வேன்
    வாரின்மேல் வளரும் திருமு€லை ம€லையாள் மணாளனே ஒற்றியூர் வாழ்வே.
  • 4. கருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம் கருதும்இக் கணமிருந் ததுதான்
    வருங்கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என்செய வல்லேன்
    பெருங்கணம் சூழ வடவனத் தாடும் பித்தனே உத்தம தவத்தோர்
    மருங்கண வுறநின் றரகர எனுஞ்சொல் வான்புகும் ஒற்றியூர் வாழ்வே.
  • 5. கன்னியர் அளகக் காட்டி€டை உழன்ற கல்மனக் குரங்கினேன் த€னைநீ
    அன்னியன் என்றே கழித்திடில் உனக்கிங் கார்சொல வல்லவர் ஐயா
    என்னியல் அறியேன் நமன்தமர் வருநாள் என்செய்வேன் என்செய்வேன் அந்தோ
    மன்னிய வன்னி மலர்ச்ச€டை மருந்தே வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
  • 6. பசிக்குண வுழன்றுன் பாததா ம€ரை€யைப் பாடுதல் ஒழிந்துநீர்ப் பொறிபோல்
    நசிக்கும்இவ்வுட€லை நம்பினேன் என்€னை நமன்தமர் வருத்தில்என்செய்கேன்
    விசிக்கும்நல் அரவக்கச்சினோய் நினது மெய்அருள் அலதொன்றும் விரும்பேன்
    வசிக்கும்நல் தவத்தோர்க் கருள்செயஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
  • 7. கான்றசோ றருந்தும் சுணங்கனின் பலநாள் கண்டபுன் சுகத்€தையே விரும்பும்
    நான்றநெஞ் சகனேன் நமன்தமர் வருநாள் நாணுவ தன்றிஎன் செய்கேன்
    சான்றவர் மதிக்கும் நின்திரு வருள்தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா
    மான்தனிக் கரத்தெம் வள்ளலே என்€னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே.
  • 8. மடிக்குறும் நீர்மேல் எழுத்தினுக் கிடவே €மைவடித் தெடுக்குநர் போல
    நொடிக்குளே ம€றையும் உடம்பி€னை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால்
    படிக்குளே மனத்தால் பரிவுறு கின்றேன் பாவியேன் தனக்கருள் புரியாய்
    வடிக்குறும் தமிழ்கொண் டன்பருக் கருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
  • 9. அங்€கையில் புண்போல் உலகவாழ் வ€னைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே
    பங்கமுற் ற€லைவ தன்றிநின் கமல பாதத்€தைப் பற்றிலேன் அந்தோ
    இங்கெ€னை நிகரும் ஏ€ழையார் எனக்குன் இன்னருள் எவ்வணம் அருள்வாய்
    மங்€கையோர் பு€டைகொள் வள்ளலே அழியா வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
  • 10. கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்ணிலார் போல்கிடந் து€ழைக்கும்
    குணத்தினில் கொடியேன் தனக்குநின் அருள்தான் கூடுவ தெவ்வணம் அறியேன்
    பணத்தினில் பொலியும் பாம்ப€ரை ஆர்த்த பரமனே பிரமன்மால் அறியா
    வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

நாள் அவத்து அலைசல் // நாள் அவத்து அலைசல்

No audios found!